அந்த டீயில்...
அதை பருகுகையில்,
மேலாய் நிற்கும்,
ஒவ்வொரு நுரையும்,
ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொன்றாய்.....
தெரிகிறது, தெறிக்கிறது!
தெரிவது என்ன?
தெறிப்பது என்ன?
அவரவர் மனதை பொறுத்தது...
அதை பருகுகையில்,
மேலாய் நிற்கும்,
ஒவ்வொரு நுரையும்,
ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொன்றாய்.....
தெரிகிறது, தெறிக்கிறது!
தெரிவது என்ன?
தெறிப்பது என்ன?
அவரவர் மனதை பொறுத்தது...
சில நேரங்களில்,
சிறகுகள் ஏன்
முளைத்தது என்ற
எண்ணம்
எழாமல் இல்லை...
எது உயரம்,
எதற்கு உயரம்?
ஏன்?எதனால்
என்று எல்லாமும் தோன்றும்...
அப்படித் தோன்றுவதே
இயல்பென்று,
இயல்பாய் கடப்பதைத்தவிர
வேறென்ன செய்ய...?!
நண்பர் ஒருவர், பகிர்ந்திருந்த ஒரு புகைப்படத்திற்கு என்னுடைய கற்பனையில் ஒரு முயற்சி, கவிதை வடிவில்
காலமெல்லாம்
நெற்களத்தில் கதிர் அறுத்து
பழகிய கைகள்;
தேவைப்படின் -
போர் களத்தில்
பகைவர் கழுத்தறுக்கவும் வல்லவை;
எனினும்,|
எம் தொழில்
போர் அடித்து நெல் பெருக்குவதே,
போர் மூட்டி
குருதி பெருக்குவது அல்ல...
எதை உயர்த்த வேண்டும்,
எதைத் தாழ்த்த வேண்டும் என்பதை
யாம் நன்கறிவோம்…
காடுமேடுகளில் வசிக்கும்
வேசமில்லா
பாமரனும் நானே,
பாருக்குப் பாசமிக்க
மன்னனும் நானே...
நான் படித்த ஒரு வார இதழின் ஒரு பகுதியில் குறிப்பிட்டு இருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு சிறிய கட்டுரையில் வெளியான ஒரு சிறிய தகவல் அல்லது யோசனை, பின்னாளில் எப்படி அனைவருக்கும் பயன்படும் ஒரு ஊடகமானது என்பதை பற்றியது அது. அதில் குறிப்பிட்டு இருந்தது இதுதான்
ஆஸ்திரியா நாட்டில் 1800 களின் மத்தியில் ஒரு பேராசிரியர், மக்கள் எப்படி எளிதாக தங்களுக்குள் அதிகம் செலவில்லாமல் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்ததாகவும், அதில் அவர் கூறி இருந்த ஒரு யோசனையின் அடிப்படையில் உருவானதுதான் தற்போதைய காலத்தில் நாம் பயன்படுத்தும் அஞ்சல் அட்டை என்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார்கள்.இந்த தகவலைப் படித்ததும் ஒரு பதிவு போட வேண்டுமென்று முடிவு செய்து இருந்தேன். அதற்கான இடைவெளி கொஞ்சம் அதிகம்தான், இருந்தாலும் இப்போது அது இறுதி வடிவம் பெற்றுவிட்டது. சமீபத்தில் நான் பார்த்த ஒரு திரைப்பட காட்சியில், ஒரு சிறிய விஷயத்தை வைத்து அதை ஒரு கதையாக உருவானதாக காண்பித்து இருந்தார்கள். உடனே இந்த பதிவினை எழுத ஆரம்பித்துவிட்டேன். எதேச்சையாக, ஒரு பேராசிரியர் கொடுத்த ஒரு ஐடியா வை வைத்து, பின்னாளில் அது மிகப்பெரிய ஒரு தகவல் பரிமாற்றமாக முடிந்தது என்பதை எளிதாக கடந்து விட முடியாது. என்னதான் அந்த பேராசிரியர் யோசனை சொல்லி இருந்தாலும், அதைக் கவனிக்கவும், அதை செயல்படுத்தவும் ஒருவர் இருந்திருக்க வேண்டும். அதாவது, ஒருவரின் தேடலுக்கான விடையினை அந்தப் பேராசிரியர் வழியாகக் கண்டுகொண்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.நான் ஏற்கனவே சில பதிவுகளில் புத்தகம் வாசிப்பைப் பற்றிய எனது கண்ணோட்டம் வேறு என்று கூறி இருந்தேன். மேலும் நமக்கான அறிவு தேடல் என்பது வெவ்வேறு வழிகளில் நமக்கு கிடைக்கும் வாசிப்பு ஒன்று மட்டுமே அதை பூர்த்தி செய்வது இல்லையென்று. தேடலுக்கான விதையானது - கண்டு,கேட்டு,உண்டு,உயிர்த்து என எவ்விதமாக தேடினும் கிடைத்துவிடும். ஆயினும் அதற்கான முயற்சியும், தேடலும் கண்டிப்பாக நம்மிடம் இருக்க வேண்டும்.
ஒரு தமிழ் படத்தில் வரும் முக்கியமான உரையாடல் இது,
உன் வாழ்க்கையில் ஒரே ஒரு லட்சியம் அல்லது குறிக்கோள் வைத்துக்கொள். அதை சுற்றி உன்னுடைய கவனத்தை திருப்பி அதை நோக்கி பயணி என்பதுதான் அது.
ஒரு சிறிய விதையில் இருந்துதான் மிகப்பெரிய ஆலமரம் வருகிறது, அதுபோல நம்முடைய ஒவ்வொரு ஆக்கப்பூர்வமான சிந்தனையில் இருந்தும் ஏதேனும் ஒரு புதிய படைப்புகள் உருவாகக் கூடும். இதை திடமாக நம்பிக்கொண்டுதான் இன்று பலரும் "Start Up / Entrepreneur" என்று சொல்லப்படும் தொழில் முனைவோர், அவர்களது சிந்தனைகளை உருவாக்க ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்.
சிறிது காலத்திற்கு முன்பு வரை, நமது வீட்டு வாசலில் வந்து கார் அல்லது ஆட்டோ நம்மை வந்து அழைத்து செல்வதற்கு நமது கைபேசியிலேயே வசதிகள் வந்துவிடும் என்று எண்ணிப் பார்த்து இருப்போமா? ஒரு சிறிய யோசனையினை வைத்து எப்பேர்ப்பட்ட வளர்ச்சியினை அடைந்து இருக்கிறார்கள் இந்த "App" ஐ உருவாக்கியவர்கள். [மன்னிக்கவும் - இந்த வசதி இன்னும் பெரு சிறு நகரங்களுக்கு மட்டுமே உள்ளது]. இது போல, பலவற்றை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
அதாவது ஒரு ஐடியா/கரு என்பது எங்கிருந்து வேண்டுமென்றாலும் வரலாம். அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோமோ அதன்படியே நமது பயணம் தொடரும். அது மாதிரி, தற்போதைய சூழலில் இருக்கும் இந்த பறந்து விரிந்த இந்த உலகில், ஒரு ஐடியா(கரு) வை எப்படி, முன்னின்று எடுத்து வெற்றி பெருகிறோமோ அதை பொறுத்துதான் நமது வாழ்க்கை அமையும். அதற்கு தனியாக ஒரு தேடல் வேண்டும்,விடா முயற்சி வேண்டும். நாம் பார்க்க கூடிய ஒவ்வொரு விஷயமும் அதற்கென ஒரு தனி வரலாறு அல்லது கதை இருக்கும். நான் எழுதும் இந்த கட்டுரை முதற்கொண்டு.
ஒரு வாசகர் / நண்பர் ஒருவர் ஒரு புத்தகம் எப்படி உருவாகிறது என்பதை பற்றி ஒரு பதிவு வேண்டுமென்று கேட்டிருந்தார்.நான் அதற்கென தனியாக எதையும் தேடி அலையாமல், என்னுடைய அனுபவத்தையே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த போது, கல்லூரியில் எங்களது "Department" காக வருடா வருடம் ஒரு புத்தகம் வெளியிடுவது உண்டு. நான் இறுதி ஆண்டு படித்தபோது, அந்த புத்தகத்திற்கான "Editor" பொறுப்பை நான் ஏற்றிருந்தேன். அந்த புத்தகத்திற்கு பெயர் வைப்பதில் இருந்து, எமது நண்பர்களிடம் அவர்களது படைப்புகளை வாங்குவது [கட்டுரை, கவிதை, முக்கிய குறிப்புகள்-தகவல்கள், ஓவியம்] என பலவிதமான கலவையாக அவர்கள் தரும் படைப்புக்களை தொகுப்பது ஒரு பெரிய வேலையாக இருந்தது. அதில் தவறு இருந்தால் அவர்களிடம் விளக்கம் கேட்பது என பல வேலைகள் இருந்தது. அதன்பிறகு, பதிப்பகத்திற்கு சென்று அவர்களிடம் பல "Proofs" பார்க்க வேண்டி இருந்தது. நாம் செய்யும் சிறு பிழையும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் பல மணி நேரங்கள் செலவிட வேண்டி இருந்தது. ஒரு சிறிய புத்தகத்திற்கே, அதுவும் வெகு சிலருக்கு மட்டுமே கொடுக்கப்படும் புத்தகத்திற்கே இவ்வளவு மெனக்கெடல் என்றால், அநேகம் பேராலும் படிக்கும் புத்தகத்திற்கு எவ்வளவு மெனக்கெடல் இருக்கும்?
இந்த பதிவினை எங்கோ ஆரம்பித்து எங்கே கொண்டு போகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது கேள்விகளுக்கான பதில் என்றும் நம்மை சுற்றித்தான் இருக்கிறது. ஆயினும், நாம்தான் அதை சரியாக கவனிக்காமல் சுற்றிக் கொண்டு இருக்கிறோம். நம்மை சுற்றி நாம் சரியாக கவனிக்க ஆரம்பித்தாலே ஒவ்வொரு நாளும் நாம் கற்றுக்கொண்டே இருக்கலாம். பல கேள்விகளுக்கான பதில் பெரும்பாலும் நம்மிடம் இருந்தும், நம் அனுபவத்தில் இருந்தும் கிடைத்துவிடும். பல நேரங்களில் நாம் கற்ற விஷயங்களை, பாடங்களை நாம் கண்டு கொள்ளாமல் போவதாலும், அதிலிருந்து கற்றுக்கொள்ளாது போவதாலும் நமக்கான தேடல் இன்னும் நீள்கிறது. அவ்வளவுதான், மற்றபடி
நம்மை சுற்றித்தான் நமது உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறது, இது அறியாமல்தான் நாம் இவ்வுலகைச் சுற்றி வருகிறோம்.
முந்தைய சார்பு பதிவு # https://anbanvinoth.blogspot.com/2016/02/blog-post.html
ஏற்கனவே சாப்பிட்டு ராமன் தலைப்பில் நான் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன், அதன் தொடர்ச்சியினை இங்கு பார்ப்போம்.
இந்த கட்டுரை எழுதுவதற்கு மிக முக்கிய காரணம், என்னுள் எழுந்த கேள்விதான். அது என்னவெனில், சமீப காலமாக மிக அதிகமான அளவில் அதிகரித்து வரும் பலதரப்பட்ட உணவு வகைகள்தான் அது. இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், ஒவ்வொரு உணவினையும், வெவ்வேறுவிதமான கலவையாக கொடுப்பதில் பல உணவகங்களும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன, அது உணவின் தரத்தினையும், நமது ஆரோக்கியத்தினையும் பாதிக்காத வகையில் இருந்தால் நலம். ஆனால் , பார்க்கும் பல்வேறு புதிய உணவு காம்போக்களும் சற்று பயமுறுத்துவதாகத்தான் இருக்கிறது.
அன்றாடம் நாம் உண்ணும் இட்லியில் இருந்து அதன் வேறு ஒரு பரிணாமத்தை கொடுத்துக் கெடுத்துக் கொண்டிருப்பதாக எண்ணுகிறேன். அதாவது அந்த இட்லியினை மேற்கத்திய கலாச்சார உணவுகளின் சுவையினையும் பிணைத்து கொடுப்பது. உதாரணமாக, இட்லி-பர்கர் மாதிரியான முயற்சி. நான் ஏற்கனவே கூறியது போல, அந்தந்த இடங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதிலும் குறிப்பாக அந்தந்த பகுதிகளுக்கென சிறப்பு உணவுகள் உண்டு. அது அந்த வட்டார மக்களுக்கும் அவர்களின் வாழ்வு முறைக்கும் ஒத்துப் போவதாலும் பிடித்துப் போவதாலும் அது அவர்களுக்கென ஒரு உணவாகிறது. அதை எல்லோருக்குமென மாறுவது சற்று கடினம்தான், இருந்தாலும் சற்று முயற்சித்தால் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.இருப்பினும், இந்த முயற்சிகள், மிக நல்ல முறையில் இருப்பின் உணவு ருசி பிரியர்களுக்கு கொண்டாட்டம்தான். புதுப்புது உணவுகளை சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் அவ்வாறு சொல்கிறேன்.
எனக்கு பிடித்த ஒரு தொலைக்காட்சி தொடரில் வரும் ஒரு பகுதியினை குறிப்பிட விரும்புகிறேன். அந்த நிகழ்ச்சியானது உணவினை பற்றியது. வாரம்தோறும் ஒரு ஒளிபரப்புவதால் அதை ஒரு தொடர் எனவும் சொல்லலாம். அந்த நிகழ்சியில் வரும் புகழ் பெற்ற சமையல் கலைஞர், அவர் தேடி சென்று பல இடங்களில் கிடைக்கும் அற்புத உணவுகளின் வரலாறு, அதன் மூலப்பொருட்கள், செய்யும் முறை என பலவற்றையும் விரிவாக சொல்வார். அந்த பகுதி முடிந்த பிறகு, அவருடைய சமையல்கூடத்திற்கு வந்து, அவரது ரசனையில் அவர் சமீபத்தில் தெரிந்து கொண்ட அந்த உணவில் சிறு வித்தியாசத்தை புகுத்தி அதை செய்து காண்பிப்பார். அப்படிப்பட்ட நிகழ்வுகளைத்தான் நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புவது, முயற்சியானது நல்லதொரு ஆரோக்கியமான சிந்தனையில் இருந்து வந்தால் அது நிச்சயம் வெற்றி பெரும். நான் குறிப்பிட்டு யாரையும் குறை சொல்லவில்லை,
அதேநேரம் ஒரு மாற்றத்திற்கான முயற்சியானது எந்தவொரு இடத்தில் இருந்தும், யாரிடம் இருந்தும் வரலாம். அது சிறிய ஒரு உணவகம் ஆக இருக்கலாம், அல்லது பெரிய சமையல் நிபுணரிடம் இருந்து வரலாம். எப்படி இருப்பினும், அதற்கு முறையான வரவேற்பு இருந்தால் மட்டுமே அது அடுத்த கட்டத்த்தை நோக்கி செல்ல முடியும்.இதில் அடுத்து ஒரு முக்கியமான ஒரு காரணியை சொல்லியே ஆக வேண்டும், அது "தேவை". ஒருவருடைய அல்லது பலரது தேவையினை பூர்த்தி செய்தாலும்கூட அந்த உணவு மிக விரைவில் அனைவரிடமும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துவிடும். அதற்கு மிக சிறந்த உதாரணம், சென்னையில் அநேக இடங்களில் பிரபலமாக இருக்கும் "வடகறி". இதன் ஆரம்பம் எதுவாக இருக்கும் என்பதை, நம்மால் மிக எளிதாக கணிக்க முடியும். மீந்து போன வடையினை வீணாக்க விரும்பாமல், அதில் ஒரு முயற்சி செய்ததன் விளைவுதான் தற்போதைய "வடகறி". இது முற்றிலும் "தேவை" என்பதற்காக விளைந்த ஒரு உணவு பதார்த்தம்தான். இந்த வரிசையில் கொத்து ப்ரோட்டா போன்ற உணவுகளையும் அடக்கலாம். ஒருவருடைய தேவையினை மட்டும் வைத்து ஒரு உணவின் பரிமாணத்தை அளவிட முடியாது, அது அநேகம் நபர்களால் தேடப்படும் ஒரு உணவாக இருந்தால் மட்டுமே அதற்கான சாத்தியம் சாத்தியப்படும்.
ஒருவருடைய ருசியின் பசிக்கு பலவித புது உணவுகள் கிடைக்க கூடும். இருப்பினும் அது பலராலும் விரும்பப்பட்டால் மட்டுமே அது அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் என்பதில் திடமான நம்பிக்கை உள்ளது. மீண்டும் அடுத்த பதிவில் பார்க்கலாம், அதுவரை ருசியின் பசியோடு காத்திருங்கள்.
சமீபத்தில் குடும்ப நண்பர் ஒருவரை சந்தித்த போது, அவர் பகிர்ந்து கொண்ட ஒரு விஷயத்தின் தாக்கம்தான் இந்தக் கட்டுரையினை நான் எழுத தூண்டுகோலாக இருந்தது. அவர் IT-இல் நல்லதொரு பணியில் இருக்கும் நண்பர். அவரது அலுவலகத்தில், அவரது பரிந்துரையில் வேலைக்கு சேர்ந்த ஒருவர், சில மாதங்கள் கழித்து இவரிடமே சில வேலை-ரீதியிலான அரசியலை நிகழ்த்தியிருக்கிறார். இத்தனைக்கும் இவர் மிகுந்த அனுபவம் மிக்கவர், கம்பெனியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் ஒருவர்கூட. இவரும் அதை எதுவும் பெரிதுபடுத்தாமல் இன்று வரை பொறுமை காத்து வருகிறார். மிக முக்கிய பொறுப்பில் இருந்தாலும், அவர் அந்த நபரை எதுவும் செய்ய விரும்பவில்லை. அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்.
சிறுவயதில் அவர் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கேட்ட குட்டி கதையின் தாக்கம்தான் அது. அதாவது, துறவி ஒருவர் தான் செல்லும் பாதையில், தேள் ஒன்று தண்ணீரில் தத்தளித்து உயிருக்குப் போராடுவதை பார்க்கிறார். உடனே அதைக் காப்பாற்றுவதற்காக தண்ணீரில் இருந்து கைகளில் எடுக்கிறார். இருப்பினும் அது அவரைக் கொட்டிவிட்டு மீண்டும் தண்ணீரிலேயே விழுந்துவிடுகிறது. தேள் கொட்டிய பிறகும், அவர் மீண்டு அதே போல முயற்சித்து மீண்டும் கடி வாங்குகிறார்.
இதைப் பார்த்து, அருகில் இருக்கும் நபர் அந்த துறவியிடம், "அது கொட்டும் என்று தெரிந்த பிறகும் ஏன் அதை காப்பாற்ற முயற்சி செய்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அதற்கு அந்த துறவி "கொட்டுவது அதன் குணம், உதவுவது எனது குணம். அது கொட்டுகிறது என்பதற்காக நான் எனது நல்ல குணத்தை விட விரும்பவில்லை" என்று முடிக்கிறார். இதை மனதில் வைத்தே தான் அவ்வாறு இருப்பதாக அவர் தெரிவித்தார். ஒரு வானொலி நிகழ்ச்சி எப்படி ஒருவரது வாழ்வில், நீங்கா இடம் பிடித்து அவரை நல்ல ஒரு திசையில் பயணிக்க வைத்திருக்கிறது என்று எண்ணும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வாறாக, எத்தனை எத்தனை பேர் பயனடைந்து இருப்பார்கள்?நல்லதொரு வானொலி நிகழ்ச்சியும் நல்லதொரு புத்தகம் கொடுக்கும் அனுபவத்தை கொடுக்க தவறியதில்லை என்றால் அது மிகையல்ல.தொலைக்காட்சி மக்களின் அன்றாட வாழ்வில் கோலோச்சுவதற்கு முன்னாள் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அற்புத ஊடகம்தான் "வானொலி". தமிழில் இதன் பெயரை சொல்லும்போது எவ்வளவு அழகாக இருக்கிறது (பெயர் காரணத்தால்தான் என்னவோ). மக்களை பிணைக்க தபால், தந்தி, நாளிதழ், தொலைபேசி, தொலைக்காட்சி என பல வழிகள்/ஊடகங்கள் உள்ளன. அதில் வானொலிக்கும் தொலைக்காட்சிக்கும் எப்போதும் மிக சிறந்த இடம் உண்டு. ஏனென்றால் இதில் பல முக்கிய விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக கலையின் மூலம் பல கருத்துக்களை மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க முடியும். ஊடகத்தின் தாக்கம் அறிந்தோர் பலர், இன்று இந்த மாதிரி ஊடகத்திற்கென்றே பிரத்யேகமான பிரிவும் எல்லோரது அரசியல் கட்சிகளிலும் இருப்பதை பார்த்தே, இந்த ஊடகத்தின் தாக்கம் என்ன என்பது நமக்கு விளங்கும். பாடல்களைத் தொகுத்து ஆக கேட்கும் பழக்கத்திற்கு அடிக்கோடிட்டது இந்த வானொலிதான் என்றால் அது மறுக்கமுடியாத உண்மைதான்.
தற்போதைய சூழலில், விளம்பரத்தை பிரதானமாக நம்பி இயங்கும் பல அலைவரிசைகள் உள்ளன. இருந்தாலும், நமது கோடைப் பண்பலை மற்றும் ஆகாச வாணி போன்ற மத்திய/மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படும் வானொலி நிலையங்களின் தாக்கம் அதிகம் தான். மற்ற தனியார் நிறுவன வானொலிகளை போல மிக இரைச்சலாக இல்லாமல், பின்னால் எந்தவொரு இசைக்கோர்வையும் இல்லாமல் மிக அமைதியான ஒரு சூழலில் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசுவதை கேட்கவே அவ்வளவு அற்புதமாக இருக்கும். அதற்காக மற்ற வானொலிகளை முற்றிலும் குறை கூறுவதாக நினைக்க வேண்டாம். பெரும்பாலான வானொலிகளில், இரவு நேரங்களில் வரும் பல நிகழ்ச்சிகளில் எந்தவொரு இரைச்சலும் இல்லாமல் தான் இருக்கும்.
செவிக்குணவில்லாதபோது சிறிது உணவு வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதற்கேற்ப, நமது வானொலியினைத்தான் சொல்லியிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நம்மில் அநேகம் பேருக்கு, இந்த வானொலி நினைவுகள் நிச்சயமாக இருக்கும். அப்படி எனக்கான சில நினைவுகளை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பின்னால் செல்கிறேன். தொலைக்காட்சி பெட்டியானது எல்லோருடைய வீடுகளிலும் ஒரு அங்கம் வகிக்காத அந்தக் காலத்தில், ரேடியோவானது அந்த இடத்தை நிரப்பி இருந்தது. சிலரது வீடுகளில் மின்சாரம் மூலமாகவும், பலரது வீடுகளில் பேட்டரி (பேட்டரி கட்டை என்று சொன்னால் மிக சரியாக இருக்கும்) மூலமாகவும் இயங்கிக்கொண்டிருந்தது. நான் குறிப்பிடுவது நான் பிறந்து வளர்ந்த எனது கிராமம் போன்ற பகுதிகளை பற்றியது. அப்போதைய நகரத்து சூழல் என்னவென்று எனக்கு தெரியவில்லை.
கிராம பகுதிகளில், அப்போதைய சூழலில் மின்சார தடை என்பது ஒரு வழக்கமான ஒரு நிகழ்வுதான். அதுவும், இரவு நேரங்களில் ஏதேனும் பழுது என்றால் மறுநாள் வரை காத்திருக்க வேண்டியது வாடிக்கையான ஒன்று. அவ்வாறான நேரங்களில், கிட்டத்தட்ட இரவு 8 மணிக்கெல்லாம் பெரும் நிசப்தமாக இருக்கும். பெரும்பாலும் எல்லோரும் உறக்க நிலைக்கு சென்று கொண்டிருப்பார்கள். இவ்வாறான சூழலில், சிறிது நேரம் ரேடியோ கேட்டுக் கொண்டே தூங்கும் பழக்கம் வெகு சிலருக்கு இருக்கும். என்னதான் அவர்கள் அந்த ரேடியோவின் ஒலி அளவை குறைத்து வைத்திருந்தாலும், அந்த இரவின் நிசப்தத்தில் காற்றோடு கலந்து எனது செவிகளில் விழுவதுண்டு. மேலும் அந்த ரேடியோ நமது பக்கத்து வீட்டில் இருந்து வந்தால், மிகத் தெளிவாக கேட்க முடியும். இப்பொழுது இருப்பது போன்று, பல அலைவரிசைகள் அப்போது இருந்ததில்லை. எனவே, ரேடியோவை ஆன் செய்து விட்டால் அப்படியே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான். இருப்பினும் அது அவ்வளவு சுகமாக இருந்தது. அப்படிப்பட்ட அந்த இரவு நேரத்தில், நமது கோடை பண்பலையில் இருந்து வரும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் பேசும் வார்த்தைகள் - அப்படியே நமது தலையினை வருடி, தாலாட்டுவது போல இருக்கும். இதற்கு ஒரு படி மேலாக, அதிலிருந்து ஒலிக்கும் பாடல் அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெரும்பாலும் நல்லதொரு பாடல் கோர்வையினை கொடுப்பார்கள். சில நேரங்களில், நேயர் விருப்பம் ஒளிபரப்பாகும்.
பள்ளி நாட்களில், எப்பொழுதாவது மதிய உணவிற்கு பரோட்டா கடையில் சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கும். அப்பொழுது சரியாக மதியம் 12:40 மணியளவில் ஒளிபரப்பாகும் அந்த செய்தி தொகுப்பு. "ஆகாசவாணி... செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி" இந்த குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு, அதில் நானும் ஒருவன். கிரிக்கெட் விளையாட்டின் ஸ்கோர் கேட்பதும் இதில்தான். அந்தக் குரலை அந்த வானொலியில் கேட்பது அலாதி இன்பமாக இருக்கும். எந்தவொரு அதிரிபுதிரி இசை இல்லாமல், "பிரேக்கிங் நியூஸ்" மியூசிக் இல்லாமல் கேட்ட அந்த செய்திகளில்தான் எத்தனை அமைதி?இது கோடைப் பண்பலை, நிகழ்ச்சியில் அடுத்து வரும் பாடல் ... படத்தில் இருந்து ... இணைந்து பாடியது.
பேட்டரி கொண்டு இயங்கும் வானொலி பெட்டிகளில் ஒலியின் சப்தத்தை வைத்து அதன் பேட்டரியினை மாற்றும் காலம் அறிந்து மாற்றுவது. "பேட்டரி கட்டை மாத்தனும் போல" என்று சொன்னது இப்போது கேட்டது போல இருக்கிறது. இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்,
இதற்கான எண்ண அலை, மனதில் வரிசையாய் வந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் இந்த உரையினை இத்துடன் முடிக்கிறேன், நீங்களும் உங்களது வானொலி நண்பனின் அந்நாள், இந்நாள் நினைவுகளோடு ஒப்பிட்டு பாருங்கள்.
"வானொலி எனக்கொரு போதி மரம், நாளும் எனக்கது சேதி தரும்" என்று பாட தோன்றுகிறது எனக்கு.
என் மனதில் நீண்ட நாட்களாகவே இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்தேன். "மன்னிப்பு" என்பது வெறும் ஒற்றை வார்த்தை என்று பொத்தாம்பொதுவாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. அது எதனால் என்பது இந்த பதிவினைப் படித்தால் உங்களுக்கும் விளங்கும் என்பது எனது எண்ணம்.
தமது தவறுகளுக்காக நியாயம் கற்பிப்பதும், அதுவே பிறர் செய்த தவறெனில் அதை எப்படி பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து பெரிதாக்குவதும் பலரது இயல்பு. இது ஒரு பொதுவான மனித குணம் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. அப்படியெனில், எவரும் தத்தமது தவறுகளை உணரவோ, அதை பிறர் அறியவோ விரும்புவதில்லை. இதில் சிக்கலான விஷயம் என்னவென்றால், அது மேலும் பல தவறுகளுக்கு அஸ்திவாரம் ஆகிவிடுகிறது.
பொதுவெளியில் சொல்லப்படும் கதைகளில் பெரும்பாலும் மூன்றாவது நபர்களை வைத்தே அவர் செய்த தவறிலிருந்து எப்படி நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம் என்பதாக இருக்கும். வெகு சிலர் மட்டுமே, அவர்கள் செய்த தவறை தைரியமாக சொல்லி, நான் அந்த தவறிலிரிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சொல்வர். மேலும், சிறு வயதில் அறியாமையில் செய்த சிறிய திருட்டுகளை ஒத்துக்கொள்வதற்கும் ஒரு மனம் வரவேண்டும்.
அப்படி நான் படித்த சமீபத்திய வார இதழின் வாசகர் பகுதியில், அவர் சிறு வயதில் பள்ளியில் சிறுபிள்ளைத்தனமாக செய்த சிறு திருட்டை எழுதி, அந்த பழக்கத்திலிருந்து மீண்டு வர அவரது ஆசிரியர் உதவியதை நன்றி உணர்வோடு குறிப்பிட்டு இருந்தார். இதில் இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும், ஒன்று இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, இப்போது அவர் நலமாக இருக்கிறார் - இருப்பினும் சிறு வயதில் செய்த தவறை இப்போதும் அதை தரு என உணரும் அந்த மனம் மிகப்பெரியது. மற்றொன்று இன்று அவர் ஒரு நல்ல பதவியில் இருக்கும் ஒரு ஆசிரியர். இப்படிப்பட்டோருக்கு கொடுக்கும் மன்னிப்பிற்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு, மேலும் அந்த மன்னிப்பை அவர்கள் ஒரு தண்டனையாகத்தான் கருதுவார்கள்.இதை மனதில் வைத்தே நமது வள்ளுவர் இந்தக் குறளை எழுதி இருக்கக்கூடும்
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
பெரும்பாலானோர் தமது தவறுகளுக்கு எத்தனை வருடங்கள் ஆனாலும் நியாயம் கற்பித்துக் கொண்டிருப்பர் - அவர்களுக்கு மன்னிப்பு என்பது ஒரு பொருட்டே அல்ல. இதை பறைசாறுவதாக உள்ளது நாம் சிறுவயதில் படித்த மனுநீதி சோழன் கதை.
ஆக, இரு வேறு கருத்துக்கள் உலா வருகின்றன. ஒன்று மன்னிப்பை ஆதரிப்போர், மற்றோரு தரப்பு மன்னிப்பை நிராகரிப்போர். இருப்பினும், சூழல் சார்ந்து எடுக்கும் முடிவெய் மிகச்சரியாக இருக்கும்.
ரமணா படத்தில் வரும் அந்த பிரபலமான "மன்னிப்பு, தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை" என்று அழுத்தமாக பதிவு செய்து இருப்பார்கள் நமது மனுநீதி சோழன் மாதிரி.
அன்பே சிவம் படத்தில் "ஒருத்தன கொல்லணும்னு வந்துட்டு, அவனை கொல்லாம அவன்கிட்ட மன்னிப்பு கேக்கிற மனசு இருக்கே - அது கடவுளுக்கு சமம்" என்று மன்னிப்பின் பெருமை பேசி இருப்பார்கள். அப்படி கடவுளுக்கு இணையாக சொல்லும் அளவிற்கு அவ்வளவு பெரிய விஷயமா என்றால் - ஆம் அது மிகையல்ல. விருமாண்டியில் வரும் ஒரு கட்சியில் மன்னிப்பு கொடுப்பவரைவிட, மன்னிப்பு கேட்பவரை ஒருபடி மேலே வைத்துதான் சொல்லி இருப்பார்கள்.மன்னிக்கிறவன் மனிதன், மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன்என்று.மேலும் மனிதன் என்பதைகூட உடன்பாடு இல்லாமல், மன்னிப்பு கேக்கிறவன் "மன்னிப்பு கேக்குறவன் வீரன்" என்று அந்த கதாப்பாத்திரத்தை காட்டி இருப்பார்கள். அந்த அளவிற்கு நமது மனங்களில் நாம் செய்த தவறை ஒப்புக்கொள்வதில்லை அப்படியொரு பிடிவாதம் இருக்கிறது. அதாவது நாம் செய்த தவறை ஒப்புக்கொண்டு நாம் பெரியமனிதன் ஆனால் கூட, அது நமக்கு அவமானம் என்று கருதும் அளவிற்கு அந்த "மன்னிப்பு" என்னும் வார்த்தைக்கு அவ்வளவு ஒரு வலிமை இருக்குமெனில் மன்னித்துவிடுவதென்பது எளிய விசயம்தானா என்றால் அதற்கும் ஆயிரம் விஷயங்களை அடுக்கலாம். ஒருவர் மன்னிப்பு என்று சரணாகதி அடைந்துவிட்டால், அவருக்கான மரியாதையும் தண்டனையும் "மன்னிப்பு" மட்டுமே என்பதுதான் நாம் காலங்காலமாக பார்த்துவருவது. எந்தவொரு போருக்கு முன்னும், சமாதானம் எனும் பெயரில் நடததப்படும் பேச்சு வார்த்தையும் இதில் அடங்கும். ஒருவேளை, இருவரும் ஒரு சமரசத்திற்கு வரும்போது ஒருவர் கீழே இறங்கி (மன்னிப்பு வேண்டுவது) வருவதும், அதை மறறொருவர் அங்கீகரிப்பதும் (மன்னிப்பு வழங்குவதும்) என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
எது எப்படியோ, நான் இந்தப் பதிவில் ஏதேனும் தவறாக எழுதியிருந்தால் மன்னிப்பு ஒரு வீரனாக 😆 கேட்டுவிட்டு பெரிய மனுஷனாக மாறிக்கொள்கிறேன், நீங்கள் எப்படி - மன்னித்து விட்டு மனிதராகிறீர்களா😁?
இந்தப்பதிவு எனக்குள் எழுந்து நீண்ட காலம் ஆகிறது, அதற்கு இந்தூர் எழுத்து வடிவம் கொடுத்துவிடலாமென்று முடிவு செய்து இன்று பதிவிடுகிறேன். பாத்திரத்தில் தண்ணீர் நிரப்புவதை பார்க்கும்போதெல்லாம் எப்பொழுத்ம் இந்த எண்ணம் வந்துகொடன்தான் இருக்கும்.
தினமும் நம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வை வைத்துதான் இந்த கட்டுரையினை எழுதுகிறேன். தினமும் குளிக்கும்போது நமது பக்கெட்டில் நிரம்பும் நீரானது இருவகையாகப் பிரித்துள்ளேன். ஒன்று நீர் நிறைய இருக்கும்,அதீத உயரத்தில் இருக்கும் தொட்டியில் இருந்து அதிக வேகத்தில் விழும் நீர். மற்றோன்று குறைந்த வேகத்தில் விழும் நீர். ஒரு குழாயில் வழியும் நீரானது, அதன் வேகத்தைப் பொறுத்து அதன் பயனும் மாறுகிறது. ஒருவேளை அதன் வேகம் அதிகமாக இருந்தால் விரைவாக பாத்திரத்தை நிரப்பி சிறிது நீரானது வெளியேறிவிடுகிறது. மேலும் வேகம் அதிகமாக இருக்கும்போது நீரானது அந்தப் பாத்திரத்தில் முழுமையாக நிரம்பி இருக்க வழி இல்லை.
மக்களிடம் தமக்கென ஒரு அடையாளம் பெற்ற , தமது படைப்பிற்கென்று ஒரு தனி கூட்டத்தினை வைத்திருக்கும் சிறந்த படைப்பாளர்கள் எப்பொழுதும் அவர்களது அடுத்த படைப்பினைப் பற்றிய சிந்தனையில் இருப்பார்கள். இதனைத்தான் நான் அதிக வேகத்தில் விழும் நீர் என்று நான் குறிப்பிட விரும்புகிறேன். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்து படைப்புகளை வேகமாகக் கொடுப்பதாலும், அல்லது சொற்பொழிவின்போது அதீத கருத்துக்களை அடுத்தடுத்து செல்வதாலும் அதை எல்லோராலும் உள்வாங்க முடிகிறதா என்பது மிகப்பெரிய கேள்விக்குறிதான். அதீத கருத்துக்களை ஒருசேர தரும்போது அது சேர வேண்டிய இடத்தை சென்று சேர்வதில்லை, இதனால்தான் வேகத்தைவிட விவேகம் மிக முக்கியம் என்கின்றனர். தாம் சொல்லும் கருத்துக்களை செவி சாய்க்கும் இடத்தில் மட்டுமே நம் நமது கருத்துக்களை சொல்ல வேண்டும். பல இடங்களில் நான் பார்த்ததுண்டு, ஒரு சிறந்த பேச்சாளர் அல்லது நகைச்சுவை பேச்சாளர், தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பர். ஆனால், அதை கவனிப்போர் வெகு சிலர் மட்டுமே இருப்பார்கள். இருப்பினும் நமது கருத்தானது எவரேனும் ஒருவருக்காவது பிடித்தும், புரிந்தும் இருந்தால் நலம் என்ற கோணத்தில் எடுத்து கொண்டு நகர்ந்து விட வேண்டும். இதை, வேகமாக வழியும் குழாயில் இருந்து வெளியேறும் நீருக்கு ஓர் உதாரணமாகக் கொள்ளலலாம். தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால், அது பாத்திரத்தை வெகு விரைவாக நிறைந்துவிடும். மேலும் சிறிது கவனம் சிதறினாலும் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அதிக வேகம் காரணமாக, பாத்திரம் நிரம்பியதாக தோன்றினாலும் சிறிதளவு இடம் கண்டிப்பாக வெற்றிடமாகத்தான் இருக்கும்.
சிறு படைப்பாளிகளுக்கான பிரச்சனையானது வேறுமாதிரியாக இருக்கிறது. இதனை வேகம் குறைவாக விழும் குழியினோடு ஒப்பிட விரும்புகிறேன். வேகம் குறைவு என்று நான் குறிப்பிடுவது, ஒவ்வொரு படைப்பிற்குமான இடைவெளி மற்றும் ஒவ்வொன்றுக்கும் ஆகும் கால விரயம். தமது கற்பனையில் அல்லது எண்ணத்தில் உதிக்கும் அனைத்தையும் இவர்களால் அப்படியே வெளிக்கொணர முடிவதில்லை (இது எனது அனுபவம்). அதற்கு மறதி ஒரு காரணமாக இருந்தாலும், உதிக்கும் கருவை உருவாக்க கால தாமதம் செய்வதும் ஒரு முக்கிய காரணியாகிப் போகிறது. எழுத வேண்டுமென்ற எண்ணம் மட்டும் இருந்தால் போதாது. அதை இறுதி வடிவமாக படைக்கும் வரை விடாமுயற்சியோடு தொடர்ந்தால் மட்டுமே இது சாத்தியம். மனதில் அவ்வப்போது தோன்றும் கருவினை அப்படியே நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. ஒன்று அதை பற்றிய குறிப்பெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், அல்லது மனதில் தோன்றியவுடன் எழுத ஆரம்பித்துவிடவேண்டும். இவ்விரணடையும் தவறவிடும்பட்சத்தில் மனதில் உருவான கரு, மனதோடு மறைவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. அது, பாத்திரத்தில் நிரம்பி வழிந்து வீணாகும் நீரினைப்போலஇருப்பதாகவே உணர்கிறேன்எனக்கு அப்படியாக நிறைய அனுபவம் உண்டு.
நல்ல சிந்தனை உள்ள படைப்பாளர்கள் இன்னும் அதிகம் உருவாகாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கான ஒரு இடம் கிடைக்காது போனதால்தான். சிலர் சிறந்த எழுத்தாளர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கான களம் அவருக்கு கிடைக்காது போவதால், அவருடைய அனைத்து படைப்புகளும் கேட்பாரற்று போய் இறுதியில் அந்தப் படைப்பாளியும் தனது முயற்சியிலிருந்து வெளிவந்துவிடுகிறார். இதற்கு, விடா முயற்சி இருந்தால் சாதிக்கலாம் என்ற கூற்றினை என்னால் முழுவதுமாக ஏற்க இயலாது. எல்லோருக்கும் குடும்பத்தின் ஒத்துழைப்பு, வாய்ப்புகள் ஒரேமாதிரியாக அமையாது என்பதால், இதுவும் தவிர்க்க இயலாது. ஒரு படைப்பாளியின் படைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும்போது, அவர் மென்மேலும் புது வார்ப்புகளை படைக்க அது தூண்டுதலாக இருக்கும். இல்லையெனில், பாத்திரத்தில் வழிந்தோடும் நீர் போல அவரது படைப்பும் வீணாகித்தான் போகும்.
வேகமா? விவேகமா? எதுவாயினும், அங்கீகாரம் அவசியம்.
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
நீங்கள் எல்லாம் சொர்ப்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களோ
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்கள் எல்லாம் அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
அர்ப்ப மாயைகளோ
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
கடந்தவை அனைத்தும் கனவு போல இருப்பதால் நானும் ஒரு கனவுதானோ? மொத்த உலகமும் பொய்தானோ என்று கேட்கும் கேள்விக்கு பதில் தெரியவில்லை. எவ்வளவு ஒரு வலிமையான கேள்வி, சிந்தனை? வாழும் காலத்தில் வஞ்சனை இல்லாது சச்சரவு இல்லாது, அன்போடு வாழ்ந்தால்தான் என்ன? எதற்கு இந்த போட்டி, பொறாமை? என்னை மிகக் கவர்ந்த வரிகள் இதுதான்.
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால் நானும் ஓர் கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?
நாம் இப்பொழுது பார்க்கும் காட்சி அடுத்த நொடியில் மாயை ஆகின்றது, அப்படியென்றால் மாயமான அனைத்தையும் மறுபடியும் பார்க்கலாமா என்றும் எழுதி இருப்பார்.
காண்பதெல்லாம்
மறையுமென்றால்
மறைந்ததெல்லாம்
காண்போமன்றோ
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம், ஒரு வித்தியாசமான ஒரு கேள்வி என்னுள் எழும்.
500 வருடங்களுக்கு முன்பு நான் இருக்கும் இந்த இடத்தில் எவரேனும் இருந்திருப்பாரா?அப்படி இருந்திருந்தால், 500 வருடங்களுக்கு பிறகு இதே இடத்தில் இருந்து ஒருவன்(நான்) அவரை பற்றி நினைப்பேன் என்று எண்ணி இருப்பாரா? அதுபோலவே, இன்னும் 500 வருடங்களுக்குப் பிறகு, இந்த இடத்தில் யாரவது இருந்தால் 'நான் எண்ணியது போலவே யாரவது எண்ணியிருப்பார்களா?' என்று எண்ணிப் பார்ப்பாரா? என்பதுதான் எனது கேள்வி.
காட்சியில் முன்னிலையில் வரும் நடிகர்களுக்கு மட்டுமல்ல அந்தக் காட்சி முழுவதும் வருபவர்களுக்கும் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி நடிக்க வேண்டுமென்று சொல்லிக்கொடுப்பது எவ்வளவு சிரமம், அதற்கு ஏற்றாற்போல அந்த நேரத்தில் நடிப்பதும் சிரமம்தான்.அடுத்து நான் குறிப்பிட விரும்புவது, சில கலைஞர்களுக்காவே வைக்கப்படும் காட்சிகள். திரைத்துறையில் வாய்ப்பு என்பது வெகுசிலருக்கு மட்டுமே கிடைக்கும், கிடைக்கும் அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்பவர்கள் மேலே வருகிறார்கள்,பிறர் மீண்டுமொரு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அப்படி வாய்ப்பு கொடுப்பதற்கும் ஒரு மனம் வரவேண்டும், அப்படி மனம் இருந்தாலும் அதற்கான காட்சி வேண்டும், அப்படி இல்லாவிட்டாலும் தனியாக ஒரு காட்சியினை வைப்பதைப்பற்றி யோசிக்க வேண்டும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்படி பல உள்ளன, அந்த வரிசையில் நான் சுட்டிக் காட்ட விரும்புவது, அதிசய பிறவி படத்தில் வரும் ஒரு காட்சிதான்.
அப்படி வைக்கப்பட்ட காட்சிதான் "டேய், யாரவது சண்டைக்கு வாங்கடா" என்று "உனக்காக எல்லாம் உனக்காக" படத்தில் இடம்பெற்று இருக்கும்.இதை படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதுமாதிரி எண்ணிலடங்கா காட்சிகள் உள்ளன. எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சில காட்சிகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.
தலைப்பு பிடித்தோ,
பொழுது பிடித்தோ (bore)
எதோ ஒன்று பிடித்து (my blog link)
இங்கு வந்தபின்,
இதை படித்துப் பிடித்தாலும்,
பிடிக்காது படித்தாலும்,
பிடிக்காவிடிலும்
படிக்குமளவிற்கு சொற்களை
படி நிறைய வைத்திருக்கிறேன்,
வேண்டுமெனில் மடிநிறைய
அள்ளிச் செல்லுங்கள் - இல்லையெனில்
தட்டிவிட்டு செல்லுங்கள் (skip / comment)
ஒரு படைப்பாளிக்கு, அவருடைய எண்ணங்களை அவருடைய விருப்பம்போல செய்யவிட்டால் அதற்கு பலனாக இதுபோன்றதொரு அற்புத படைப்புகள் கிடைக்கும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த படம்.
ஆனால், மழையே பெய்யாதிருப்பது எப்படி ஒரு சாபமோ, அதுபோல மழை பொழிந்துகொண்டே இருப்பதும் ஒரு சாபம்தான்.குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதிர் பருவம் என மூன்று காலங்ககளிலும் கதையினை நகர்த்தியிருப்பர். படத்தின் இறுதிக் கடசியில் தன்னுடைய தவறை உணரும் நேரத்தில் கதைநாயகன் எடுக்கும் முடிவும், அதன் பிறகு அவரது மகன் எடுக்கும் முடிவும் மிக அற்புதம். கதையில் வரும் அத்தனை கதாப்பாத்திரங்களுக்கும் ஆடை வடிவமைப்பும் அவ்வளவு பிரமாதமாக இருக்கும். மொத்தத்தில் அனைவரும் பார்த்து ரசித்து வரவேற்க வேண்டிய ஒரு அற்புத படம்தான் இந்த "Tumbbad"
நாட்டாமை வீட்டுக்கு புதுப்பொண்ணு வந்தா...
கூடவே வந்தது "Two Seater Sofa"...
நாட்டாமை வீட்டுக்கு வந்தது "Sofa",
நாட்டாமைகாரம்மா "Sofa" ஆச்சுது...
நாட்டாமை தங்கச்சி மணக்கோலம் போட்டா
"Sofa"வும் மாறிச்சி கெட்டப்பை மாத்தி...
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
..
..
அட கல்யாணம் பண்ணாலும் இல்லேன்னாலும்
"Sofa" வ பண்ணு மனசு விரும்பி...
"நம்முயிர்க்கு மேல - மான மரியாதை
மானம் இழந்தாலே - வாழத் தெரியாதே"
மாறுகோ மாறுகோ மாறுகையி...ஒரு சில ராகங்கள் மனதோடு லயித்துப் போகும்போது , அப்படி மனதோடு படுத்தூடும் பாடல்களுக்கு வேறு சில வார்த்தைகளை போட்டு பாடும் வழக்கமும் உண்டு, என்னைப் போல் பலருக்கும் இருக்கும் என்று நம்புகிறேன் . உதாரணமாக நாம் பார்க்கும் வாசகங்கள்கூட அந்தப் பாட்டாக பாடும் தருணங்களும் வருவதுண்டு. சாலையில் வாகனத்தில் செல்லும்போது அறிவிப்புப் பலகையில் காணும் "பாலங்களில் (நீங்கள்) முந்தாதீர் , வளைவுகளில் (நீங்கள்) முந்தாதீர் " வாசகங்கள், "காலங்களில் அவள் வசந்தம்" பாடலாக பாட வைக்கிறது இந்த வாசகங்கள்.
அடி ஜோருகோ ஜோருகோ..ஜோறுகயி
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்பாடல் ராகம்/தாளம்#
புன்கணீர் புருசல் தரும்
சொன்னால்தான் காதலா ... (மூன்று விதமாக)தளபதியில் வரும் "சின்ன தாய் அவள்",வள்ளியில் வரும் "என்னுள்ளே என்னுள்ளே" போன்ற என் மனதோடு நெருக்கமான பாடல்களை , மிக மெதுவாக , அதுவும் சிறிது இடைவெளி விட்டு பாடும்போதோ, அதை அப்படிக் கேட்கும்போதோ கூடுதலாக ஒருவித உணர்வு வருகிறது.
தவறென,
தவறாக எண்ணத்
தவறாதவையும்,
தவறாகின்றன...
"நம்ம ஊர்ல இருத்து பக்கத்து ஊருக்கு எவ்வளவு தூரம்? "
" - 2 km"
"சரி அப்ப, பக்கத்து ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எவ்வளவு தூரம்?"
"...!?...?"
"தெரியாதா....? விவரம் பத்தாதுடா..."