நீண்ட இடைவேளைக்குப் பிறகு எனது பதிவினைப் பதிவிடுவதற்கு ஏற்றாற்போல, இந்தக் கட்டுரையின் தலைப்பும் பொருத்தமாக வந்துள்ளதாகக் கருதி இந்த கட்டுரையினை எழுதுகிறேன்.
சமீபத்திய விளம்பரங்களில் என்னை மிக வெகுவாகக் கவர்ந்த விளம்பரம் என்றால் அது, Fevicol விளம்பரம்தான். இந்த விளம்பரத்தில் கிட்டத்தட்ட மூன்று நான்கு தலைமுறைகளைக் காட்டியிருப்பார்கள், நமது கலாச்சார மாற்றங்களையும் தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். பாடல் வரிகளும் இவ்விளம்பரத்திற்கு ஒரு உயிரோட்டம் கொடுத்திருப்பதாகவே நான் கருதுகிறேன்.
விளம்பரத்தின் ஆரம்பத்தில், கருப்பு வெள்ளையிலிருந்து தொடங்கியிருப்பார்கள். அப்போதைய கலாச்சாரத்தையும் காட்டியிருப்பார்கள். அந்தக் காட்சியானது 10-15 வினாடிகள் வரும், அந்த மிகக் குறுகிய இடைவெளியில் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவு சொல்லியிருப்பார்கள். வீட்டிற்கு வந்த மருமகள் அவ்வளவு அடக்கமாக, கட்டுப்பாடாக இருப்பது போல அந்தக் காட்சியானது இருக்கும். புது மணப்பெண் பவ்வியமாக தரையில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பார், அவரது மாமனாரோ அருகில் ஒரு நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து இருப்பார். அடுத்தடுத்து வரும் காட்சிகளில் நாம் கடந்து வந்த காலங்களை தெளிவாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
கணவனும் மனைவியும் கை கோர்த்து நடிப்பதை அநாகரிகமாக கருதிய காலத்தில் ஆரம்பித்து, இருவரும் அன்யோன்யமாக ஒரே "Sofa"வில் அமர்ந்து இருப்பதுவரை காட்சிப்படுத்தியிருப்பதைத்தான் நான் குறிப்பிட்டு சொல்கிறேன்.
என்னதான் பல தலைமுறைகளைக் கடந்தாலும், காலங்களைக் கடந்தாலும் பல சூழ்நிலைகளைக் கடந்தாலும் - இவை அனைத்தையும் தாண்டி உறுதியாய் நிற்கும் அந்த "அசைக்க முடியாத" நம்பிக்கையினை மிக அழகாக காட்சிப்படுத்தியது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இத்தனை தலைமுறை/வருடங்கள் கடந்தும் நிலைத்திருக்கும் அந்த "Sofa" வின் உறுதித்தன்மைக்கு "Fevicol"தான் காரணம் என்பதை காட்சியின் மூலம் மட்டுமே கொடுத்திருப்பது இன்னொரு சுவாரசியம். ஒட்டுமொத்த சிறப்பையும், அவர்களுடைய பொருளுக்கு மட்டுமே கொடுக்காமல், அதைச் செய்பவரை முன்னிலைப்படுத்தி கொடுத்திருப்பது - மிகச் சிறப்பு. இறுதியாக பாடலை முடிக்கும்போது மிகச் சிறப்பாக இருக்கும்.
Similar Previous Post

நாட்டாமை வீட்டுக்கு புதுப்பொண்ணு வந்தா...
கூடவே வந்தது "Two Seater Sofa"...
நாட்டாமை வீட்டுக்கு வந்தது "Sofa",
நாட்டாமைகாரம்மா "Sofa" ஆச்சுது...
நாட்டாமை தங்கச்சி மணக்கோலம் போட்டா
"Sofa"வும் மாறிச்சி கெட்டப்பை மாத்தி...
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
ஆனது இப்போ ராஜம்மா "Sofa"
..
..
என்னதான் பல தலைமுறைகளைக் கடந்தாலும், காலங்களைக் கடந்தாலும் பல சூழ்நிலைகளைக் கடந்தாலும் - இவை அனைத்தையும் தாண்டி உறுதியாய் நிற்கும் அந்த "அசைக்க முடியாத" நம்பிக்கையினை மிக அழகாக காட்சிப்படுத்தியது வெகுவாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இத்தனை தலைமுறை/வருடங்கள் கடந்தும் நிலைத்திருக்கும் அந்த "Sofa" வின் உறுதித்தன்மைக்கு "Fevicol"தான் காரணம் என்பதை காட்சியின் மூலம் மட்டுமே கொடுத்திருப்பது இன்னொரு சுவாரசியம். ஒட்டுமொத்த சிறப்பையும், அவர்களுடைய பொருளுக்கு மட்டுமே கொடுக்காமல், அதைச் செய்பவரை முன்னிலைப்படுத்தி கொடுத்திருப்பது - மிகச் சிறப்பு. இறுதியாக பாடலை முடிக்கும்போது மிகச் சிறப்பாக இருக்கும்.
அட கல்யாணம் பண்ணாலும் இல்லேன்னாலும்
"Sofa" வ பண்ணு மனசு விரும்பி...
Similar Previous Post
No comments:
Post a Comment