Wednesday, April 15, 2020

இதையெல்லாமா எழுதுவாய்ங்க? - பாகம் இரண்டு

மனதிற்குள் எழும் எண்ணங்கள் பலவற்றையும், "இதையெல்லாமா எழுதுவாய்ங்க" என்று கட்டுரை எழுதாமல் விட்டது உண்டு. வெகு சிலவற்றை மட்டுமே ஒரு குறிப்பெடுத்து வைத்துக் கொண்டதுண்டு, பின்னாளில் நேரம் கிடைக்கும்போது அதை விரிவாக எழுதலாம் என்று. அப்படிப்பட்ட கட்டுரையில் ஒன்றுதான் இது. ஏற்கனவே இந்த தலைப்பில் ஒரு பாகம் எழுதி இருந்தேன். ஆகவே இரண்டாம் பாகம் எழுத வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசையாக இருந்தது. ஆனால் அது முதல் பாகத்தின் கருவாக இருக்க வேண்டும், உரு வேறாக இருக்க வேண்டுமென்பதில் தெளிவாக இருந்தேன். அன்றாட வேலைகளை முடித்துவிட்டு நமக்கென தனியாக நேரம் ஒதுக்கி தனிமையில் எழுதுவது ஒன்று. இப்போது இருக்கும் ஊரடங்கில்   குடும்பம் குடும்பமாக தனிமையில் இருப்பதால், தனியாக தனிமைப்படுத்திக கொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. நம்முடைய எழுத்துக்களும் எண்ணங்களும் அனைவரோடும் ஒத்துப்போக வாய்ப்பில்லை. நமது மன நிலையினை ஒத்த சிலருக்கும், அதை புதிதாக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே ஒத்துப்போகும். அதனால் எழுதுவதென்று ஆகிவிட்டது,நமக்குத் பிடித்துப் போனால் பதிவிடலாம் என்று துணிந்து பதிவிட்டுவிட்டேன்.

நேரம் கிடைக்கும்போது ஏதாவதொரு "blog/website"இல் இருக்கும் கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப் படிக்கும்போது, நமது அப்போதைய மன நிலையினையொத்த பதிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். அதை ஏன் எழுதி இருப்பார் என்று யோசிக்க தோன்றும்?  நாம் எழுதுவது யாராவது ஒருவருக்காவது பிடித்து போக வாய்ப்பு உண்டு. அப்படி அவர் அந்தக் கட்டுரையினைப் படிக்கும்போது, எந்தமாதிரியான மன நிலையில் இந்த கட்டுரையினை எழுதியிருப்பார் என்று ஒரு சில வினாடிகள்,  யோசித்துப் பார்க்க துண்டினால் போதும், அந்தக் கட்டுரைக்கு அதுவே மிகப் பெரிய சன்மானம். குறைந்தபட்சம் இதையெல்லாம் ஒரு கட்டுரைன்னு இவன் எப்படி எழுதினான், அப்படின்னு திட்டினாலும் மனம் மகிழத்தான் செய்யும்.





சில நேரங்களில் நீங்களே இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும். அன்றாடம் செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கம் உடையவர்கள், பெரும்பாலும் அவர்களுக்கு பிடித்த செய்திகளை தேடி தேடி படிப்பார்கள். உதாரணத்திற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கடைசி பக்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். செய்தித்தாளை முழுவதும் படிக்கும் பழக்கம் வெகு சிலருக்கு மட்டுமே இருக்கும்.

அப்படி, சில பகுதிகளை ஒதுக்குபவர்கள்கூட, ஒரு சில சந்தர்ப்பங்களில், உதாரணத்திற்கு சலூன் கடையில் காத்திருக்கும்போது, கிடைக்கும் துண்டு பேப்பரில் அவர்கள் அதுவரை படிக்காத பகுதியாக இருந்தாலும் படிக்க நேரிடும். அப்படி அவர்கள் படிக்கும்போது, ஒருவேளை அதில் அவர்களுக்கு பிடித்துப் போனால், அன்றிலிருந்து நாளிதழ் வாசிக்கும்போது,அதுவரை ஒதுக்கிவைத்த பகுதியினையும் சேர்த்து படிப்பார்கள். அதுமாதிரி, எனக்கு தோன்றுவதை எழுதுகிறேன், அதை படிப்பதும் பிடிக்காது போவதும் அவரவர் முடிவிற்கே விட்டுவிட்டு நகர்ந்துவிட முடிவு செய்துதான் இதை பதிவு செய்கிறேன்.

தலைப்பு பிடித்தோ,
பொழுது பிடித்தோ (bore)
எதோ ஒன்று பிடித்து (my blog link)
இங்கு வந்தபின்,
இதை படித்துப் பிடித்
தாலும்,
பிடிக்காது படித்தாலும்,
பிடிக்காவிடிலும்
படிக்குமளவிற்கு சொற்களை
படி நிறைய வைத்திருக்கிறேன்,
வேண்டுமெனில் மடிநிறைய
அள்ளிச் செல்லுங்கள் - இல்லையெனில்
தட்டிவிட்டு செல்லுங்கள் (skip / comment)

பி.கு: நாளிதழின் அனைத்துப் பகுதியினையும் படிக்கும் பழக்கம் எனக்கு கிடையாது, குறிப்பாக ஒரு நாளிதழில் வரும் வாசகர் பக்கம், ஒரு நாள் எதேச்சையாக படித்தபோது, எனக்கு பிடித்துப்போகவே, நான் தவறாது படிக்கும் பகுதிகளில் அதுவும் ஒன்றாகிப் போனது.

இதே மாதிரியான முந்தைய பதிவு # https://anbanvinoth.blogspot.com/2014/06/blog-post_23.html

No comments: