வெகு நாட்களாகவே எனக்கு "மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது" என்றால் என்னவாக இருக்கும் என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டிருந்தது. அதற்கு விடை காணவே இந்தப் பதிவினை பதிவு செய்கிறேன். இதைப் படித்துவிட்டு மொட்டை எது? முழங்கால் எது? என்றெல்லாம் கேள்விகள் என்னை நோக்கி வராது என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன்.
ஊரிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, பேருந்தில் ஒலித்தது இந்தப் பாடல்
இவரது இயக்கத்தில் வெளிவந்து பலரது தூக்கத்தையும் கெ(கொ)டுத்த படம்தான் "Inception". இந்தப் படத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எப்படி முடிச்சுபோடுவதென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் இருக்கும் கயிறு கொண்டு திரித்திருக்கிறேன், பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பாடலின் வரிகளுக்கும், படத்திற்கும் இருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை - "கற்பனை".
கனவுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லையென்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்திருப்பார். ஒரு கனவிற்கு கதை திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் "Inception" படம். ஒரு நகைச்சுவைக்கு பாடல் எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...".
சில சமயங்களில் நமக்கு வரும் சில கனவுகள், சம்பந்தப்பட்டவைகளாகவும் சில கனவுகள் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமலும் இருக்கும். அதைபோலவே, இந்தப் பாடல் வரிகளும் அப்படித்தான்
இவையெல்லாவற்றுகும் முத்தாய்ப்பாக பாடலின் இறுதிக் காட்சியில், கழுதையானது கணைத்துக் கொண்டிருப்பதோடு அந்தப் பாடலானது நிறைவடையும். அந்தப் பாடல் பிடிக்காமல், அது கணைக்கிறதா, அல்லது அவர் அந்தப் பாடலில் சொன்னதெல்லாம் கேட்கச் சகிக்காமல் கணைக்கிறதா? என்பதை காட்சிப்படுத்தியவர் சொல்லியிருக்கமாட்டார். அதைப் போலவே, "Inception" படத்திலும் கடைசிக் காட்சியில் அந்தப் பம்பரமானது சுழன்று கொண்டு இருப்பதோடு நிறைவடையும். அதாவது, அதுவரை நடந்த அனைத்துமே கனவா? படம் முழுவதுமே கனவா? அல்லது எந்தப் பாதிவரை கனவு? என்பதை சொல்லியிருக்கமாட்டார். இதையெல்லாம் நமக்குப் பின்னால்வரும் சந்ததிகள் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று இயக்குனர் அதை நம்மிடமே விட்டுவிடுவார்.
அப்பப்பா, எங்கையோ ஆரம்பித்து ஒருவழியாக முடித்துவிட்டேன். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்...

ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னுசென்னை வந்ததும் நோலன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதுப் படத்தை பார்த்துவிடுவதென்ற முடிவோடு கிளம்பியிருந்தேன். அது என்னன்னு தெரியல, அவருடைய முந்தைய படமான "Inception"க்கும், இந்தப் பாட்டிற்கும் ஒரு முடிச்சுப் போட வேண்டுமென்று எண்ணம் எழுந்தது.
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையிலதானே இப்போ காணுது பூமி
இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி
இவரது இயக்கத்தில் வெளிவந்து பலரது தூக்கத்தையும் கெ(கொ)டுத்த படம்தான் "Inception". இந்தப் படத்திற்கும் இந்தப் பாடலுக்கும் எப்படி முடிச்சுபோடுவதென்று தெரியவில்லை. இருந்தாலும் என்னிடம் இருக்கும் கயிறு கொண்டு திரித்திருக்கிறேன், பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பாடலின் வரிகளுக்கும், படத்திற்கும் இருக்கும் மிக நெருங்கிய ஒற்றுமை - "கற்பனை".
கனவுகளுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லையென்று நாம் நம்பிக் கொண்டிருக்கும்போது, அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை தத்ரூபமாக எடுத்திருப்பார். ஒரு கனவிற்கு கதை திரைக்கதை எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் "Inception" படம். ஒரு நகைச்சுவைக்கு பாடல் எழுதினால் எப்படி இருக்கும், அதற்கான விடைதான் இந்தப் பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...".
சில சமயங்களில் நமக்கு வரும் சில கனவுகள், சம்பந்தப்பட்டவைகளாகவும் சில கனவுகள் எந்தவொரு சம்பந்தமும் இல்லாமலும் இருக்கும். அதைபோலவே, இந்தப் பாடல் வரிகளும் அப்படித்தான்
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குஞ்சு வந்ததுன்னுயானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டுகதையிலதானே இப்போ காணுது பூமி"மரபணு மாற்றம்" என்கின்ற பெயரில் விளைவிக்கப்படும் காய்கறிகளை இதற்குப் பேருதாரணமாகச் சொல்லலாம்.
பட்டத்துராணி அதுல பதினெட்டு பேருஇந்த வரிகளைப் போலவே, சிக்கலானதாக "Inception" படத்தின் திரைக்கதையும் இருக்கும். அதாவது, ஒரு கனவிற்குள் சென்று, அங்கிருந்து இன்னொரு கனவிற்கு சென்று அங்கிருந்து மற்றொன்று என்று ஒரு சிக்கலான திரைக்கதையில் படமானது பயணிக்கும். நாம் எடுத்துக் கொண்ட இந்தப் பாடலின் வரிகள்கூட இப்படித்தான் இடியாப்பச் சிக்கலாய், நகைச்சுவையாக இருக்கும்
பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு...
மொத்தம்... இருபத்து ஆறு...!
காக்கையில்லா சீமையிலே காட்டெறுமை மேய்க்கையிலேபாடலின் நடுவில் குமரியின் குரலாய் வந்து, கிழவியாய் தரிசனம் தரும் பெண்ணும், இந்தப் படத்தில் உயிராய் உரவாடிய மனைவியின் இழப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது, இந்த வரிகளில் உள்ளதைப் போலவே, நமது கற்பனைகளுக்கு எட்டியபடி, கனவிற்குள் வரும் இடங்களை எண்ணத்திற்கேற்ப கட்டமைத்துக் கொள்ளும்படியான காட்சியமைப்புகள் இருக்கும்.
பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு
சந்தைக்கு போனா நானும் சாப்பிட்டு வர வா...
சம்பந்தம் பண்ணா உனக்கு சம்மதம்தானா...
இவையெல்லாவற்றுகும் முத்தாய்ப்பாக பாடலின் இறுதிக் காட்சியில், கழுதையானது கணைத்துக் கொண்டிருப்பதோடு அந்தப் பாடலானது நிறைவடையும். அந்தப் பாடல் பிடிக்காமல், அது கணைக்கிறதா, அல்லது அவர் அந்தப் பாடலில் சொன்னதெல்லாம் கேட்கச் சகிக்காமல் கணைக்கிறதா? என்பதை காட்சிப்படுத்தியவர் சொல்லியிருக்கமாட்டார். அதைப் போலவே, "Inception" படத்திலும் கடைசிக் காட்சியில் அந்தப் பம்பரமானது சுழன்று கொண்டு இருப்பதோடு நிறைவடையும். அதாவது, அதுவரை நடந்த அனைத்துமே கனவா? படம் முழுவதுமே கனவா? அல்லது எந்தப் பாதிவரை கனவு? என்பதை சொல்லியிருக்கமாட்டார். இதையெல்லாம் நமக்குப் பின்னால்வரும் சந்ததிகள் பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று இயக்குனர் அதை நம்மிடமே விட்டுவிடுவார்.
அப்பப்பா, எங்கையோ ஆரம்பித்து ஒருவழியாக முடித்துவிட்டேன். மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுட்டேன்னு நினைக்கிறேன்...
No comments:
Post a Comment