Saturday, May 9, 2026

சிறகுகள்


சில நேரங்களில்,
சிறகுகள் ஏன்
முளைத்தது என்ற
எண்ணம்
எழாமல் இல்லை...

எது உயரம்,
எதற்கு உயரம்?
ஏன்?எதனால்
என்று எல்லாமும் தோன்றும்...

அப்படித் தோன்றுவதே
இயல்பென்று,
இயல்பாய் கடப்பதைத்தவிர
வேறென்ன செய்ய...?!

No comments: