Sunday, June 14, 2026

என்னதான் இருக்கிறதோ? அந்த டீயில்...


என்னதான் இருக்கிறதோ?
அந்த டீயில்...

அதை பருகுகையில்,
மேலாய் நிற்கும்,
ஒவ்வொரு நுரையும்,
ஒவ்வொரு முறையும்,
ஒவ்வொன்றாய்.....

தெரிகிறது, தெறிக்கிறது!
தெரிவது என்ன?
தெறிப்பது என்ன?
அவரவர் மனதை பொறுத்தது...

Saturday, May 9, 2026

இல்லாது - இல்லாதது

இல்லாது போனதென்று,
இதுவரை - பிரச்சனை
இருப்பதாய்
எண்ணிய மனம்...

இல்லாது போனது 
இருப்பறிந்ததும், 
இல்லாமல் 
இருந்த பிரச்சனை, மீண்டும்
இல்லாது போனது!