நண்பர் ஒருவர், பகிர்ந்திருந்த ஒரு புகைப்படத்திற்கு என்னுடைய கற்பனையில் ஒரு முயற்சி, கவிதை வடிவில்
காலமெல்லாம்
நெற்களத்தில் கதிர் அறுத்து
பழகிய கைகள்;
தேவைப்படின் -
போர் களத்தில்
பகைவர் கழுத்தறுக்கவும் வல்லவை;
எனினும்,|
எம் தொழில்
போர் அடித்து நெல் பெருக்குவதே,
போர் மூட்டி
குருதி பெருக்குவது அல்ல...
எதை உயர்த்த வேண்டும்,
எதைத் தாழ்த்த வேண்டும் என்பதை
யாம் நன்கறிவோம்…
காடுமேடுகளில் வசிக்கும்
வேசமில்லா
பாமரனும் நானே,
பாருக்குப் பாசமிக்க
மன்னனும் நானே...

No comments:
Post a Comment