ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு அவசியமோ அதைவிட மிக அவசியம் அந்தக் கதைக்கான திரைக்கதை. அப்படி திரைக்கதை அமைக்கும்போது அந்தந்த பகுதிக்கு தேவையான காட்சிகளை வைப்பது மிக மிக அவசியம். ஒரு திரைப்படம் எப்படி எடுக்கப்படுகிறது என்பதை திரைத்துறையினரிடம் கேட்டால் நமக்கே ஆச்சரியம் எடுக்கும். இத்தனை சிரமப்பட்டுதான் படம் எடுக்கிறார்களோ என்று, அத்தனை மெனக்கெடல் இருக்கும். அப்படி அவர்கள் அவ்வளவு மெனக்கெட்டு எடுக்கும் பல காட்சிகள் "Editing" என்ற முறையில் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்படும். ஆக, நம் பார்வைக்கு வருவதற்கு முன்பே, அது பலரது பார்வையில் பட்டு, வெட்டுப்பட்டு, திருத்தப்பட்டுதான் நம் முன்னே திரைப்படமாக விரிகிறது.
இத்தனை பேர் பார்த்துமா மோசமான படங்கள் வருகிறது? என்று நம் அனைவர் மனதிலும் கேள்வி எழுவது நியாயமானதுதான். இருந்தாலும், எல்லா நேரங்களிலும் எல்லோரையும் திருப்திப்படுத்தி எடுக்க முடியாது. மிகச் சிலறால் மட்டுமே அது சாத்தியப்படுகிறது. சில நேரங்களில் அதுவும் பொய்த்து விடுகிறது. அப்படி, நமக்கு காட்சிக்கு வரும் படங்களில், ஒரு திரைப்படமாக பார்க்கும்போது அந்தப் படத்துடன் ஒன்றியோ அல்லது ஒன்றாமலோ பல முக்கியமான காட்சிகளை நாம் நமது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் போயிருக்கலாம். ஆனால் அந்தக் காட்சிகளை அவர்கள் எடுப்பதற்கு அவர்கள் எத்தனை முயற்சி செய்து இருப்பார்கள் என்று யோசித்தால், அடுத்தமுறை படம் பார்க்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் இன்னும் கூர்ந்து கவனிக்கவும், படம் பார்த்த பிறகு அதை பற்றிய சிந்தனையும் வரக்கூடும்.
எத்தனையோ மிகச் சிறப்பான படங்களிலும், சுமாரான படங்களிலும் பல சிறப்பான காட்சிகள் இருக்கக்கூடும், இருப்பினும் நான் பலராலும் கவனிக்கப்பாடாது இருக்குமோ என்று எண்ணி ஒரு சில காட்சிகளை இந்தப் பதிவில் எழுதுகிறேன்.
நமது கவுண்டமணி அவர்கள், ஒரு நாள் வழக்கம்போல படப்பிடிப்பிற்கு தனது காரில் பயணித்திருக்கிறார். அப்போது ஒரு இடத்தில், ஒரு பேருந்து இவரது வண்டியினை இலேசாக இடித்துவிடவே, இவர் கோபப்பட்டு வண்டியிலிருந்து இறங்கி அந்த ஓட்டுனரை நோக்கி விரைந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும் இவரை அடையாளம் கண்டு கொண்டு, அவர் என்ன சொல்ல வந்தாரோ அதை கண்டு கொள்ளாமல், அருகிலிருப்போரிடம் "இங்க பாருங்க நம்ம கவுண்டமணி சார், சார் வணக்கம், நீங்க ரொம்ப நல்லா நடிக்கிறீங்க, உங்க காமெடிதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்" அப்படின்னு அவரு பேசிக்கிட்டே இருக்காரு. அதற்கு கவுண்டமணி அவர்கள், "அதெல்லாம் இருக்கட்டும், வண்டிய பார்த்தது ஓட்ட மாட்டீங்களா? எனக்கு ரொம்ப கோபம் வருதுன்னு" சொன்னபிறகும், அந்த ஓட்டுநர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் இவரைப்பார்த்து சிரித்தவண்ணம் இருந்திருக்கிறார்கள். உடனே அவர் வெறுப்புடன் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டார், அங்கு இயக்குனருடன் நடந்ததை பற்றி சொல்லி, "நான் என்ன சொன்னாலும், நான் சண்டைக்குப் போனாலும், சிரிச்சிக்கிட்டே இருந்தாங்க" என்று முடிக்க, அந்தக் காட்சியினையே படத்தில் வைத்துவிட்டார்கள்.
இதைப்போலவே வின்னர் படத்திலும், நடந்த நிகழ்வைக் கொண்டு படமாக்கியதாக இயக்குனர் கூறியதாக ஞாபகம். அந்தப் படத்தின்போது வடிவேலு அவர்களுக்கு காலில் எதோ பிரச்சனை இருந்ததாகவும், அதனால் அந்த படம் முழுவதும் அந்தப் பிரச்சினையினையே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு படம் முழுவதும் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது போல உருவாக்கியதாகவும் கூறிக் கேள்விப்பட்டதுண்டு.
முதன்முதலில் நான் எழுத நினைத்தது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பற்றியதுதான். அந்தப் படத்தில் நாகேஷ் அவர்கள், அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தையிடம், அவரது பெண்ணை படத்தில் நடிக்க வைத்தால் அவர் மிகப்பெரிய பணக்காரர் ஆகலாம், மேலும் தனது தந்தை முன்பே கால்மேல கால் போட்டு அமரலாம் என்று சொல்வார். அதற்கு அவர், உடனே "அய்யய்யோ, அதெல்லாம் தப்பு, என்னோட முதலாளி அவர் முன்னாடி அதெல்லாம் கூடாது, அது மரியாதை இல்லை " என்று சொல்வர். இதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு சாதாரண காட்சியினைப் போலத் தோன்றும். அனால், சற்று யோசித்துப் பார்த்தால், என்னதான் தன்னிடம் திடீரென பொருள் வந்து சேர்ந்தாலும், தான் இத்தனை நாட்களாய் வேலை பார்த்த தன்னுடைய முதலாளி முன்னாள் கால்போட்டு அமர்வதை, அவருக்கு செய்யும் அவமரியாதையாய் என்னும் ஒரு உண்மையான வேலையாள்/விசுவாசியின் எண்ணம் விளங்கும். இதை வேண்டுமென்று வைத்தார்களா அல்லது எதேச்சையாக அமைந்ததா என்று சொல்ல முடியாது, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுப்பது, அந்தவொரு வசனம்தான்.
அடுத்த பதிவில் என்னை மிகவும் கவர்ந்த, எம்முடைய வாழ்க்கை முறையினை பிரதிபலித்த ஒரு காமெடி காட்சியினை பதிவு செய்கிறேன் மேலும் சில திரைக்காட்சிகளோடு.

அப்படி வைக்கப்பட்ட காட்சிதான் "டேய், யாரவது சண்டைக்கு வாங்கடா" என்று "உனக்காக எல்லாம் உனக்காக" படத்தில் இடம்பெற்று இருக்கும்.இதை படத்தின் இயக்குனர் சுந்தர்.சி அவர்கள் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். இதுமாதிரி எண்ணிலடங்கா காட்சிகள் உள்ளன. எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சில காட்சிகளை இந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறேன்.
இதைப்போலவே வின்னர் படத்திலும், நடந்த நிகழ்வைக் கொண்டு படமாக்கியதாக இயக்குனர் கூறியதாக ஞாபகம். அந்தப் படத்தின்போது வடிவேலு அவர்களுக்கு காலில் எதோ பிரச்சனை இருந்ததாகவும், அதனால் அந்த படம் முழுவதும் அந்தப் பிரச்சினையினையே அந்தக் கதாப்பாத்திரத்திற்கு படம் முழுவதும் கொஞ்சம் இழுத்து இழுத்து நடப்பது போல உருவாக்கியதாகவும் கூறிக் கேள்விப்பட்டதுண்டு.
முதன்முதலில் நான் எழுத நினைத்தது "காதலிக்க நேரமில்லை" படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பற்றியதுதான். அந்தப் படத்தில் நாகேஷ் அவர்கள், அவர் காதலிக்கும் பெண்ணின் தந்தையிடம், அவரது பெண்ணை படத்தில் நடிக்க வைத்தால் அவர் மிகப்பெரிய பணக்காரர் ஆகலாம், மேலும் தனது தந்தை முன்பே கால்மேல கால் போட்டு அமரலாம் என்று சொல்வார். அதற்கு அவர், உடனே "அய்யய்யோ, அதெல்லாம் தப்பு, என்னோட முதலாளி அவர் முன்னாடி அதெல்லாம் கூடாது, அது மரியாதை இல்லை " என்று சொல்வர். இதை மேலோட்டமாக பார்த்தால், ஒரு சாதாரண காட்சியினைப் போலத் தோன்றும். அனால், சற்று யோசித்துப் பார்த்தால், என்னதான் தன்னிடம் திடீரென பொருள் வந்து சேர்ந்தாலும், தான் இத்தனை நாட்களாய் வேலை பார்த்த தன்னுடைய முதலாளி முன்னாள் கால்போட்டு அமர்வதை, அவருக்கு செய்யும் அவமரியாதையாய் என்னும் ஒரு உண்மையான வேலையாள்/விசுவாசியின் எண்ணம் விளங்கும். இதை வேண்டுமென்று வைத்தார்களா அல்லது எதேச்சையாக அமைந்ததா என்று சொல்ல முடியாது, அந்தக் காட்சிக்கு உயிர் கொடுப்பது, அந்தவொரு வசனம்தான்.
அடுத்ததாக குணா படத்தில் வரும் ஒரு காட்சியினைப் பார்ப்போம். அந்தப் படத்தில் கமல் அவர்கள், அவரது காதலிக்கு உணவு வாங்கி கொடுத்து சாப்பிடச் சொல்வார். அவர் சாப்பிட்டு முடிக்கும்வரை பொறுமையாக காத்திருந்து பின்னர் அந்தப் பெண் சாப்பிட்டு முடித்தவுடன். "என்னது எனக்கு பசிக்கலையான்னா கேக்குற, பயங்கர பசி, என்ன செய்ய தட்டு ஒண்ணுதான் இருக்கு. அதனாலதான் காத்துக் கொண்டு இருந்தேன்" என்று சொல்வார். அதே வேகத்தில் அந்த பெண் சாப்பிட்டு மீதம் வைத்ததை கீழே தட்டிவிட்டு அதில் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவார். எனக்கு என்னவோ இது வழக்கத்திற்கு மாறான ஒரு காட்சியாகப்பட்டது. குணா எனும் கதாப்பாத்திரம் தான் உயிராய் நினைக்கும் காதலியின் மீத உணவை (கழிவை) கொட்டிவிட்டு அதே தட்டில் உணவு போட்டு சாப்பிடுவது. இதில் மேலும் கவனிக்க வேண்டிய மற்றொன்றுன்று, அவர் அந்த தட்டை சுத்தம் செய்ய மாட்டார்.
இந்தக் காட்சி இடம்பெற்ற திரைப்படம் எதுவென்று ஞாபகம் இல்லை, அந்தக் காட்சியில் இளவரசு அவர்கள் மளிகைக்கடை நடத்திவருவார். அப்போது ஒரு சிறுவன் வந்து 10 ரூபாய் கொடுத்து "எங்க அம்மா புளி வாங்கிட்டு வர சொன்னாங்க" என்று சொல்வான். அதற்கு அவர் "இந்த காசுக்கு புளி கொடுக்க முடியாது" என்பார். அந்த சிறுவன் அடம்பிடித்து நிற்பான், உடனே அவர், கை நிறைய புளியினை உருட்டி எடுத்து வருவார். சிறுவனை ஒரு விரலை மட்டும் நீட்டச் சொல்வார். அவனும் நீட்டுவான், உடனே அந்த புளி உருண்டையில் அந்த விரலை குத்திக் கொண்டு செல்லச் சொல்வார், அதாவது அந்த காசுக்கு அவ்வளவுதான் புளிவரும் என்று சொல்வார். பணத்தின் மதிப்பை அழகாக காட்சிப்படுத்தியதோடு, நம்மவர்களின் குசும்புத் தனத்தையும் சிறப்பாக காட்டி இருப்பார்கள். குறிப்பாக இந்த மாதிரியான சிறு கடைகள், டீ கடைகள் என மக்கள் அடிக்கடி புழங்கும் இடங்களில் அதன் கடை முதலாளி ஆகட்டும், அங்கு வரும் மக்கள் ஆகட்டும் இதுபோல மிகவும் குறும்புத்தனமான நடந்துகொள்வார்கள். என்னை போன்ற சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் இதை நேரடியாக அனுபவித்து இருக்கக் கூடும்.
No comments:
Post a Comment