மை கொஞ்சம் பூசிய
விழி கொண்டு
என் மெய் கொஞ்சம் - முத்தத்தின்
வழி எழுதிடு...
என் இதழ்களைப்
பற்றிப் பற்றி,
பற்றிக் கொண்ட
நெருப்பினில் பூத்த நீராய்
வியர்த்திடும் உன் இதழ்களை,
என் தோள்களில்,
உன் கரம் - பற்றி பற்றி,
சிவந்திட்ட இடங்களில்
அவ்வியர்வை கொண்டு
முத்தடம் பதித்திடு...
கண் விழித்திருக்கையிலேயே
நிழலாடிடும்
நினைவுகளில்,
கனவுகளின் கற்பனைகளில்,
கண்டிடும் அனைத்தையும்
மொத்தமாய்
முத்தமாய்
நித்தமுமாய் கொடுத்திடு...!!!
விழி கொண்டு
என் மெய் கொஞ்சம் - முத்தத்தின்
வழி எழுதிடு...
என் இதழ்களைப்
பற்றிப் பற்றி,
பற்றிக் கொண்ட
நெருப்பினில் பூத்த நீராய்
வியர்த்திடும் உன் இதழ்களை,
என் தோள்களில்,
உன் கரம் - பற்றி பற்றி,
சிவந்திட்ட இடங்களில்
அவ்வியர்வை கொண்டு
முத்தடம் பதித்திடு...
கண் விழித்திருக்கையிலேயே
நிழலாடிடும்
நினைவுகளில்,
கனவுகளின் கற்பனைகளில்,
கண்டிடும் அனைத்தையும்
மொத்தமாய்
முத்தமாய்
நித்தமுமாய் கொடுத்திடு...!!!

No comments:
Post a Comment