ஆவாரம் பூ படத்தில் வரும் ஒரு பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் ஒன்று. வெகு நாட்களாகவே இந்தப் பாடலைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஆகையில் இன்று இதனைப் பதிவு செய்கிறேன்.
இந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதற்கு வழக்கமான காரணங்களில் ஒன்று - இளையராஜாவின் இசையில் அமைந்தது.
பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிய சில பாடல்களில், தானாகவே சில இடங்களில் சிரிப்பையும், இதர சில சிணுங்கல்களையும் கொடுத்திருப்பார். அப்படிக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாலு அவர்கள் இளையராஜாவின் இசையில் தானாகவே இதைச் செய்வார். சில சமயங்களில், இருவருக்கும் இதில் கருத்து வேறுபாடும் இருந்ததுண்டு எனவும் எங்கோ படித்த/கேட்ட ஞாபகம் உண்டு.
பாடல் ஆரம்பமானது, ஒரு மெல்லிய பூங்காற்றாக, வீசும் தென்றலாய் ஒரு புல்லாங்குழலின் இசையில் இந்தப் பாடலானது ஆரம்பிக்கும். பிறகு பின்னணி இசைக் குழுவின் ஒலியானது, கடல் அலைகள் போலவே ஒலிக்கும். படத்தின் களமானது, மீனவப் பகுதி என்பதால் இந்த மாதிரியானது இசையினைச் சேர்த்துக் கொண்டாரா? அல்லது பாடலின் சுவைக்காக சேர்த்துக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் பாடலினைக் காட்சியோடு பார்ப்பவர்களுக்கு அந்தப் பாடலோடு ஒன்றிப் போய்விடுகின்ற அளவிற்கு இந்த இசையானது அமைந்து இருக்கும். இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு பின்னால் இந்தப் பாடலைக் காட்சியாகப் பார்ப்பவர்களுக்கும் இந்தப் பாடலின் காட்சியோடு ஒன்றிப் போய்விட முடியும்.
பாலு அவர்கள் பாடலின் முதல் சில வரிகளைப் பாடுவார்.
அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்சேன் மாலை
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை
இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஒரு தாலாட்டு போலவே இருக்கும். மிக மிக எளிமையான வரிகளோடு இந்தப் பாடலானது பதியப்பெற்று இருக்கும். ஆனால், இந்தப் பாடலின் தாக்கம் மிக அதிகம் பேரைக் கவர்ந்தது என்றால் அது மிகையல்ல.
வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா
முத்துப் போல கண்டானங்கே மொட்டுப் போல ரோசா
கதைப் படி, கதையின் நாயகன் சிறு பிள்ளைத்தனமான மன வளர்ச்சியில் உள்ளவனாகக் காட்டி இருப்பார்கள். இந்த வரிகளின் மூலமாக, அவனை அவனே 'கெட்டிக்காரன்' என்று சொல்லிக் கொள்ளச் செய்து சந்தோசப்படுத்தியிருப்பார் பாடலாசிரியர். பொதுவாகவே பலராலும், வெறுக்கப்படுகின்ற/ஒதுக்கப்படுகின்ற ஒருவருக்கு எவரேனும் ஆதரவு கரம் நீட்டினால் அவர்கள் மீது பேரன்பு பெருகும். மேலும் தன்னையும் மதிப்பதற்கு ஆள் உண்டு என்பதாலேயே அவர்களது தன்னம்பிக்கையும் கூடும். இதற்குப் பேருதாரணமாக நமது மகாபாரதத்தில் வரும் 'கர்ணன்' கதாப்பாத்திரத்தைக் குறிப்பிடலாம்.
இந்த வரிகளைப் பாடியவுடன், பாலு அவர்கள் இலெசான சிரிப்பினை இசையாக்கி இருப்பார். எனக்கு இந்தப் பாடலின் இடையே பாலு அவர்கள் இலேசாக சிரிக்கும் குரலில் அப்பொடியொரு ஈர்ப்பு உண்டு. என்னைப் பொறுத்தவரை இந்தப் பாடலுக்கு அது உயிர்ப்பூட்டுவதாய் அமைந்ததாகவே உணர்கிறேன். இந்தச் சிரிப்பினை பாலு அவர்கள், தாமாகவே சேர்த்துக் கொண்டாரா?அல்லது இவர் குழந்தை போன்ற மன நிலையில் இருப்பதால், தன்னவள் இப்படிச் சொன்னதும் அதை அவன் வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டுமென்பதற்காக இந்தச் சிரிப்பினைச் சேர்த்தார்களா என்று தெரியவில்லை. அற்புதமாக இருக்கும்...
இந்த வரிகளைப் பற்றி எழுதியே தீர வேண்டும்.
இந்த வரியின் முதல் வரியின் பொருளை, இரண்டாம் வரியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதை, கவிதை...

சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்
இப்போதும் கிட்டவரும் எப்போதும்
இந்த வரியின் முதல் வரியின் பொருளை, இரண்டாம் வரியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். கவிதை, கவிதை...
No comments:
Post a Comment