Tuesday, November 11, 2014

மரம் வளர்ப்போம்

சமீபத்திய வனத்துறையினரின் செயல்பாடு மிகவும் பாராட்டுகுறியதாகவே இருக்கிறது. கடந்த வாரம், பள்ளிக்கரனையின் சதுப்பு நிலப் பகுதியில் பூவரசம் மரங்களை சாலையின் ஒரங்களில் நடவு செய்ய முடிவு செய்து அதைச் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நேற்றைய தினத்தில், தேவையான அளவு மரங்கள் நடப்பட்டு இருந்தன. இன்று பார்க்கையில், அதற்கு சிறிய அளவில் முள் வேலியினை அமைத்துக் கொண்டு இருந்தார்கள்.

"...பலவகையான தினங்களைக் கொண்டாடும் விதமாக, எங்கேயோ ஓர் மூலையில் பல லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன" என்று செய்தியாகக் கேட்டுக் கேட்டு சலித்துப் போன எனக்கு, இன்று நேரில் பார்த்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் போலவே, தற்போது அகன்று விரிந்திருக்கும் நமது தேசிய நெடுஞ்சாலையி(களி)ன் நடுவிலோ அல்லது இரு மருங்கிலோ இவ்வாறான, நமது சூழலுக்குப் பயனுள்ள (மழை மேகங்களை ஈர்த்து மழையினைத் தரவல்லது இந்த பூவரச மரம்) மரங்களை நடவு செய்தால் மிக்க நன்றாக இருக்கும்.

நீங்கள் வசிக்கும் இடத்தில் ஒரு மரம் வளர்க்க இடம் இருந்தால், உங்கள் மனதில் இதற்கென ஒரு இடம் அளித்து, ஏதேனும் ஒரு மரம் வளருங்கள்.

No comments: