யாம் பெற்றெடுத்த என் தாயே...
சேயாய் வந்த தாயே...
உன்
சின்னஞ் சிறு
சிணுங்கல்களுக்கெல்லாம்
மொழியாக்கம் செய்யச் செய்த
மழலையே...
எழுவாய்,
அழுவாய், சிரிப்பாய்,
விழிப்பாய்,
கழிப்பாய், துயில்வாய் என
நீ பயில்வதையெல்லாம்
எம்மைப் பயிலச் செய்யும்
பாலமுதே...
புரள்வாய், தவழ்வாய்
எழுவாய் - விழுவாய்
என - உன்
அடுத்தடுத்த
தருணங்களை எல்லாம்
தரிசித்திட
தவமிருந்து
காத்திருக்கிறேன்...
உன்
உள்ளங்கையில்
என் விரல்
தொட்டதும்
தொட்டாச் சிணுங்கையாய்
தானாய் மூடிக் கொள்ளும்,
கைகள், தானாக என் விரல்
பற்றி நடந்திடும்
காலத்திற்காக காத்திருக்கிறேன்...!!!
1 comment:
Semma da Machi
Post a Comment