எனது ஊருக்குச் சென்னையில் இருந்து, முந்திய தினம் இரவு இரயிலில் பயணப்பட்டு அதிகாலை 5 மணியளவில் மதுரையினை அடைந்திருந்தேன். எப்பொழுதும் போலவே அன்றும், எனக்குப் பிடித்தமான "ஷ்ரி வாரி பவனில்" அற்புதமான, சுவையான ஒரு டீயினைக் குடிப்பதற்காக சென்றேன். அங்கு குடித்த தம்ளர்களை வைப்பதற்காக, கடையின் வெளியில் அகன்ற, பெரிய பாத்திரம் வைத்து இருப்பார்கள். மணக்க, மணக்க ஒரு டீயினைக் குடித்துவிட்டு நகர்ந்தேன். அந்தக் கடையினைக் கடந்ததும் "பிரேமா விலாஸ்" கடையிலிருந்து ஒரு குரல் ஒலித்ததுபோல இருந்தது. "அண்ணே, என்னண்ணே, என்னைப் பார்த்தும், பார்க்காத மாதிரிப் போறீங்க" அப்படின்னு அந்த நேரத்தில்கூட சூடாக இருக்கும், கடையிலிருக்கும் அல்வா அழைப்பது போன்ற பிரம்மை. "திரும்ப ஊருக்குப் போகும்போது, கண்டிப்பா வர்ரேன்னு" சொல்லிக்கிட்டு பெரியார் நிலையத்திற்குச் சென்றேன்.
சிறிது நேரக் காத்திருப்பிற்குப் பிறகு வந்தது "காரியாபட்டி" செல்லும் பேருந்து. அதில் ஏறி பயணப்பட்டேன். பேருந்தில் கூட்டம் ஏதும் இல்லாதிருந்தது. நான் பேருந்தின் கடைசி இருக்கையின் நடுவில் அமர்ந்திருந்தேன். அப்பொழுதுதான் அந்த தாழ்தளப் (மிதவைப்) பேருந்தின் பின்பக்க தானியங்கிக் கதவினைக் கவனித்தேன். நமது பழையை தமிழ் படங்களில், இறுதிக் காட்சிகளில் கதாநாயகர்களைக் கயிற்றால், இரு கைகளையும் கட்டி வைத்ததுபோல, அந்தக் கதவின் இரு புறமும் பல சுற்றுகள் கொண்ட கயிறு மற்றும் கம்பியால் பிடித்து(பிணைத்து) வைத்து இருந்தார்கள். அட அதுகூடப் பரவாயில்லை, ஒரு கதவின் ஓரத்தில் ஒரு அடி அகலம் மற்றும் உயரம் கொண்ட ஒரு முண்டுக் கல்லையும் வைத்து இருந்தார்கள். அடப் பாவிகளா, அது சரி,, நம்ம தலையில கல்லத் தூக்கிப் போடாம இருந்தாங்களேன்னு நினைத்துக் கொண்டு சமாதானமாகிக் கொண்டேன்.
வண்டி புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளைக் கொடுத்துக் கொண்டு இருந்தார். எனக்கு முன்னால் அமர்ந்து இருந்தவர் "அவனியாபுரம்" என்று சொல்ல அதற்கு நடத்துனர் "அவனியாபுரம் உள்ளே வண்டி போகாது, சுட்காட்டுல இறங்கிக் கொள்கிறீர்களா" என்றார் பட்டென்று, எனக்கு பக்கென்று இருந்தது.
"யேய்... யேய்ய்ய்... என்ன பேசுற, காலங்காத்தால, ஒருத்தன சுடுகாட்டுக்குப் போகச் சொல்றாரேன்னு எனக்கு ஒரே அதிர்ச்சி" சரிதான், சைத்தான் பஸ்-ல வருதுன்னு தோணுச்சு.
ஆனால் எனக்கு முன்னால் இருந்தவர் எந்தவொரு கோபம் கொள்ளாமல், பின்னால் வந்த வண்டியினைக் காண்பித்து, அந்த வண்டி போகுமான்னு கேட்க, அவரும் ஆம் என்று தலையசைத்தார். பின்னர்தான், சுடுகாட்டுக்கருகில் ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளதென்று எனக்கு விளங்கிற்று. கொஞ்ச நேரத்துல மனச கலவரப்படுத்திட்டானுவளே...
அடுத்ததாக, மண்டேலா நகரில் இறங்கி, அருப்புக்கோட்டைப் பேருந்தில் பயணப்பட்டேன். உட்காருவதற்கு இடம் கிடைக்காததால், நின்று கொண்டு பயணிக்க வேண்டியதாகியது.
பேருந்தில்
வைகைக் கரை காற்றே நில்லு...
வஞ்சி தனைப் பார்த்தா சொல்லு...
மன்னன் மனம் வாடுதென்று...
வஞ்சிதனைத் தேடுதென்று...
காற்றே... பூங்காற்றே...
என் கண்மணி அவளைப் பார்த்தால்.. நீயும்.. காதோரம் போய் சொல்லு
பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
"ஆகா, ஆகா, ஆககாஆ...." எத்தனை நாட்கள் ஆயிற்று இந்தப் பாடலைக் கேட்டு என்று மனதிற்குள் பெருத்த சந்தோசம். இத்தனை நாட்களாக, மழை எதுவும் இல்லாமல் வறண்டு கிடந்த வைகையில, இப்பொழுது மழை பெய்து இருப்பதால் இந்தப் பாடலுக்குப் பொறுத்தமாக இருந்தது. இது அரசுப் பேருந்துதானா என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. என் சந்தேகத்தை தீர்க்கும்விதமாக, அடுத்த பாடலாக "சோதனை மேல், சோதனை போதுமடா சாமி" ஒலித்தது. இப்பொழுதுதான், இது அரசுப் பேருந்துதான் என்பது உறுதிப்பட்டது. நிற்போர் பலரும், இந்தப் பாடலைக் கேட்டதும் ஒரு விதமான எரிச்சல் கலந்த புன்னகை பூத்தனர். "பாவம், டிரைவருக்கு என்ன சோகமோ?" என்று ஒருவர் முனுமுனுத்தார். இப்படியாகப் போய்க்கொண்டிருந்த பயணத்தில், திடீரென இளையராஜா பாடலுக்குத் தாவியிருந்தார்.
ஆவாரம்பூ படத்திலிருந்து ஒலித்தது அந்தப் பாடல்...
"அப்பப்பா.... அருமைய்யா..." அப்படின்னு ரசித்துக் கொண்டிருக்கையிலேயே அருப்புக்கோட்டை வந்துவிட்டது. இங்கிருந்து, எனது ஊருக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்தமையால், அங்கொரு டீ சாப்பிட முடிவெடுத்தேன்.
"மாப்ளே...! எதிர் பக்கம் இருக்கும் கடையில டீ நல்லா இருக்கும், அந்த நிறுத்தத்திற்கு அருகிலிருக்கும் கடையில் டீ நல்லா இருக்காது" என்று எனது மாமா சொன்னது ஞாபகம் வந்தது.
அந்தக் கடையில் டீ குடித்த பிறகுதான் தெரிந்தது, அவர் வேண்டாமென்ற கடையில் எவ்வளவு மோசமாக டீ இருக்குமென்று... (இதுவே மிக மோசம், அப்போ அது). டீ சாப்பிட்டு முடிப்பதற்கும் பேருந்து வருவதற்கும் சரியாக இருந்தது, அதில் ஏறி எனது ஊருக்குப் பயணப்பட்டேன். வழக்கம்போல, "அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஊரில்தான் அடுத்த நிறுத்தம். இடையில வேற டிக்கெட் இருந்தா ஏறாதீங்க" என்று நடத்துனர் கூவிக் கொண்டிருந்தார். வண்டி சென்றபோது, அவர் எங்கெல்லாம் நிற்காது என்று சொன்னாரோ அங்கெல்லாம் நின்றுதான் சென்றது... "இதுக்குத்தான் அந்தக் கூவலா? எப்பொழுதுதான் இதை மாற்றுவார்களோ?" என்று நொந்து கொண்டே ஊர் சென்று சேர்ந்தேன்.

அடுக்கு மல்லி எடுத்து வந்து
தொடுத்து வச்சேன் மாலை....
மணக்கும் ஒரு மணிக் கழுத்தில் விழுந்ததிந்த வேளை

No comments:
Post a Comment