என்னால் - இந்நாள்,
முன்னால் விரியும்
எண்ணத்தில்
எழும் கருத்தை...
அருவாய் உருவான
கருவை,
உருவாய் வடித்திட...
தருவாய்,
வருவாய் என நல்-
வார்த்தை தேடி அழைகையில்..
கெஞ்சிய நெஞ்சம் கூட,
'கொஞ்சம் பொறு'
'கொஞ்சம் பொறு' என்கையில்...
பார்த்தது, கேட்டது
நுகர்ந்தது,
உணர்ந்தது, சுவை
அறிந்தது - என
ஐம்புலன்களும் அறிந்துணர்ந்த...
அறிவுக்கெட்டிய
நல் வார்தைகளையெல்லாம்,
சேர்த்து சேர்த்து...
சேர்த்தவைகளயெல்லாம் ஒன்றாய்
கோர்த்து கோர்த்து...
கோர்த்தவை,
கருவின் உருவாய் வருமா?
அல்லது
அருவமாய்ப் படுமா?
வனப்பைக் குறைத்திடுமா? எனக்
கேள்விகள் பல கேட்டு, கேட்டு...
பார்த்து பார்த்து,
மீண்டும் மீண்டும்,
படித்துப் பார்த்து...
கருவின் உருவாய்(வை) தருவிக்கிறேன்
கவிதையென நான்...
No comments:
Post a Comment