தொலைக்காட்சியினைத் தவிர்த்து நமது நாளானது அமைய இயலாது என்று சொல்லும் அளவிற்கு இந்த தொலைக் காட்சியானது நம்மோடு ஐக்கியமாகிவிட்டது. என்னதான் மொக்கை நிகழச்சியாக இருந்தாலும் அதில் விளம்பரம் செய்வதற்கென்று பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைப் பார்ப்பதற்கென்றும் சிலர் இருக்கத்தான் செய்வோம். சிலர், எதோ ஒன்றைப் பார்த்து பொழுதைக் கழிப்பதற்காகப் பார்க்கலாம். சிலரோ, தினமும் அதைப் பார்ப்பதற்காக காத்திருந்தும் பார்க்கலாம். சிலருக்கோ, அதைப் பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமையினால் பார்க்கலாம். இதில் வேறு வழியில்லாமல் பார்ப்பவர்களது நிலைமைதான் பரிதாபமானது. அதாவது, உதாரணமாக வீட்டில் இருக்கும் சுட்டிகள் எப்போது பார்த்தாலும் "Cartoon" நிகழ்ச்சிகளையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விருப்பப்படி, நாமும் அதைப் பார்ப்பதற்கு உள்ளாகிறோம்.
இதில் வேடிக்கை என்னவென்றால், நம்முடைய யாவரது விருப்பமும் இல்லாமல், தானாக ஒளிபரப்பப்படும் விளம்பரங்கள். அது நேயர் விருப்ப நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்கும் விளம்பரம் உண்டு. "VJ" இல்லாமல் கூட நிகழ்ச்சிகள் இருக்கக் கூடும், ஆனால் விளம்பரங்கள் இல்லாமல் எதுவும் இல்லை. (செய்திகள் உட்பட). செய்திகளையே ஒரு விளம்பரமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் தற்போது, அதைப் பற்றியெல்லாம் பின்னர் எழுதலாம்.
"நீரின்றி அமையாது உலகு" என்பது போல, "விளம்பரமின்றி அமையாது தொலைக்காட்சி நிகழ்வு" என்பது இன்றைய நிலை. தொலைக்காட்சிக்கு மட்டுமல்ல நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கம் என்றும்கூட சொல்லலாம்.
தற்போதைய விளம்பரங்கள் என்று மட்டுமல்ல, விளம்பரம் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை, இந்த விளம்பரங்களுக்காகத்தான் அதிகமாக மனித மூளையானது செயல்பட்டு இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால், அதைப் பார்த்துத் தொலைக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருப்பதால், அதைப் பற்றிய எனது எண்ணத்தின் வடிவமே இந்தப் பதிவு.
விளம்பரம்1:
முன்பெல்லாம், ஊட்டச்சத்து பானத்தின்(?) விளம்பரமானது எப்படி இருந்தது?
குழந்தையானது சாப்பாட்டிற்கு டிமிக்கி கொடுத்துக் கொண்டிருப்பது போல காண்பிப்பார்கள். பின்னர், "குழந்தைகள் சாப்பாட்டினைச் சரியாகச் சாப்பிடுவது கிடையாது. அதனால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அன்றாட ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய் விடுகிறது. இதற்காகத்தான் நாங்கள் தருகிறோம் 'டுபாக்கூர் பானம்', இதனால் உங்கள் குழந்தைகள் சரியான ஊட்டச் சத்துக்களைப் பெறுவார்கள்.."
இப்படியாக இருந்த அந்த விளம்பரமானது தற்போது இப்படி வந்து நிற்கிறது.
"இன்னிக்கி இந்த டுபாக்கூர் ஊட்டபானம் கொடுத்தீர்களா?"
"இல்லியே, நாளைக்கு கொடுக்கிறேன்".
அதாவது, மறைமுகமாக, அவர்களது பானத்தைத்தான் அனைவரும் வாங்குவதாகவும், அதை அவர்கள் சரியாகக் கொடுக்க மறு(ற)ப்பதாகவும் ஒரு மாயையினை உருவாக்குகிறார்கள். என்னவொரு புத்திசாலித்தனம்?
வரகு, திணை, கேப்பை, கம்பு, சோளம் என்று சிறுதானியங்கள் பலவற்றை, பலவிதங்களில் உண்டு தின்று, தினவெடுத்த தேகம் கொண்டு வலம் வந்த நம்மிடம் ஊட்டச் சத்துக் குறைபாட்டைக் கூறுகிறார்கள். காலக் கொடுமை... கடைசியாக "கடலை மிட்டாய் சாப்பிடுங்கள், அது உடலுக்கு நல்லது" என்று சொல்லுமளவிற்கு வந்துவிட்டது இன்றைய நிலை.
விளம்பரம்2:
ஒரு அம்மணி மணக்க, மணக்க முகப்பூச்சு பூசிக் கொள்வதால் அவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம். அதனால், அந்த தன்னம்பிக்கையினை எப்படி வெளிப்படுத்துகிறார் தெரியுமா? பக்கத்து வீட்டு ஆடவனைக் கூட்டிக் கொண்டு ஓடிப் போய் கல்யாணம் செய்துகொள்ள அவரை அழைப்பதாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப் போடு, இதுவல்லவோ, "சரியான துவக்கம், தன்னம்பிக்கைக்கான வித்து"
விளம்பரம்3:
தரையினைச் சுத்தமாக்கும், கிருமிகளை அழிக்கும், கழிப்பறையினைச் சுத்தமாக்கும் என்று பலவாறாக விளம்பரப்படுத்தப்படும் பலவகையான பொருள்களும் சுத்தம் செய்வது 99.99%. அது என்ன கணக்கு? அந்த விளம்பரத்திலேயே, அவர்கள் கிருமிகளை அழிப்பதாகக் காண்பிக்கும் படத்தில் ஒரேயொரு புழு,கிருமி மட்டும் அழிக்கப்படாமல் இருக்கும். ஓ... அதுதான், 99.99% சுத்தமா? எவரேனும், இவர்கள்மீது 'கிருமிகள் அழியவில்லை' என்று வழக்குத் தொடர்ந்தால்கூட, அந்த 0.01% கிருமிதான் இதற்குக் காரணம் என்று கைவிரித்து விடுவார்களோ?
ஒரு டீக்கடையில் டீ அருந்திக் கொண்டிருக்கையில் ஒளிபரப்பானது அந்த விளம்பரம். "உங்கள் சுற்றுப் புறத்தை சுத்தமாக வைத்திருங்கள், கழிப்பறையினைப் பயன்படுத்துங்கள்". அமர்ந்திருந்த பலரும் முணுமுணுக்கிறார்கள், "இவய்ங்களுக்கு வேற வேலையே இல்லையா, இதையே திருப்பி, திருப்பி போடுறானுக. இந்த அரசியல்வாதிகள் சுத்தம் செய்றது ஒரு நாளைக்குத்தான், தினமும் சுத்தம் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். எல்லாம் ஒரு விளம்பரம்தான்" என்றார்கள். சொல்பவர் எவராய் இருந்தால் என்ன, நல்லதைச் சொன்னால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே. ஒளிபரப்பாகும், பல கீழ்தரமான விளம்பரங்களெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை, இவர்களை நோக்கி, "வாருங்கள் முன்னேறுவோம், சுத்தம் செய்வோம்" என்று அனபாக ஒரு கோரிக்கை வைத்தால் உடனே வெடித்து விடுகிறார்கள். நல்லா நடத்துங்கப்பா... இப்படியே இருங்க, நாம சீக்கிரம் முன்னேறிவிடுவோம்.
இதையெல்லாம் பார்க்கும்போது, "என்னடா விளம்பரம்?" அப்படின்னு மனசு அடிச்சுக்குது.

No comments:
Post a Comment