இரு மெய் சேர்ந்(த்)த
உயிர் மெய்யே;
எம்
மெய் அழுத்தங்களால்,
அழுத்தமாய்
பதிந்த
உயிரே,
உறவாய் வந்த
வரவே;
எம்பால் கொண்ட
அன்பால்,
அன்பால் கொண்ட
களிப்பால்,
பாலுறவு கொடுத்த
பால் உறவே;
தந்தையெனும் உறவைப்
பெற்றுத்துத் தந்த - யாம்
பெற்றெடுத்த
செல்வமே... செல்லமே;
சொந்தமாய் - எம்மிருவரின்
சந்தமாய்
சந்திச் சுவை சேர்க்க இணைந்திட்ட
பந்தமே;
சிப்பியில் உதித்த முத்தே,
எம் பெயர் தாங்கிச் செல்ல,
எம்முள்
தேங்கித் தழைத்த
தளிரே;
மதிபோல் ஒளிரும்
முகம் - உன் அன்னை யின்
அகமோ?
உதட்டோரம்
உதிர்த்திடும்
வினோதப் புன்னகை,
உன் தந்தையின் குணமோ?
பூவினுள் வளர்ந்து
பூவையாய் விளைந்த
பூவே;
ஈரைந்து திங்கள் முன்பே,
பெயர் எழுதப்படாது எழுதி வைத்த,
பெயர் வைக்கக் காத்திருந்த கவியே!!!
No comments:
Post a Comment