இந்தப் பதிவினை எழுதுவதற்கு உந்துதலாக இருந்தது ஒரு வார நாளிதழில் கேட்கப்பட்டு இருந்த ஒரு கேள்வி. அந்த நாளிதழில், கேள்வி-பதில் பகுதியில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி இதோ.
கேள்வி: சமைப்பது எப்படி ஒரு கலையோ, அது போல, அந்த சமயலை ருசிப்பதும் (சாப்பிடுவதும்) ஒரு கலைதானே?
பதில்: அதெப்படி கலையாகும். அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது.
பதிலைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. ஏனென்றால் சாப்பிடுவதும் ஒரு கலைதான் என்ற ஒருவித நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். சமையலை ரசிக்கும் நானும், ரசிகன் என்கின்ற வகையில் ஒருவித கலைஞனே (சாப்பாட்டு ராமன்). ஆதலால் இப்படிப்பட்ட ஒரு பதிலைப் பார்த்ததும் ஒருவித ஏமாற்றமே மிஞ்சியது. இருந்தாலும் அது அவரது தனிப்பட்ட கருத்து என்பதால் அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும், அந்தக் கேள்வி-பதிலானது எனக்கு இந்தப் பதிவினைப் பதிவதற்கு ஏதுவாக அமைந்தது.
அது என்னன்னு தெரியல, இந்த உலகம் சாப்பாட்டிற்கும்,சாப்பாடு செய்தவர்க்கும் கொடுக்கும் மரியாதையினை, அந்தச் சாப்பாட்டைச் சாப்பிடுபவருக்குக் கொடுப்பது இல்லை. அன்னத்தைப் பழிக்காதே என்று சொல்பவர்கள்தான். "நல்லா கொட்டிக்கோ, தின்னுக்கிட்டே இரு, பசி தாங்க மாட்டாரோ துரை, சாப்பாட்டு ராமா' என்றெல்லாம் கரித்தும் கொட்டுகிறார்கள்.
சமைப்பது எப்படி என்பதைப் பற்றியெல்லாம் விலாவரியாக, பல புத்தகங்கள் வந்து உள்ளன. ஆனால், அந்தச் சமையலைப் பற்றி விமர்சிக்க வேண்டுமென்றால் எவரேனும் ஒருவர் அதை ருசித்துப் பார்த்துத்தானே ஆக வேண்டும். எப்பேற்பட்ட கலையாக இருந்தாலும் அதைப் பிறர் உணர முடிந்தாலன்றி அதன் திறம் வெளியில் தெரிவதில்லை. அதற்கு, இந்த சமையல் கலையும் விதிவிலக்கல்ல.
சமையலைப் பற்றி பல புத்தகங்கள் வந்திருப்பதைப் போல, எப்படியெல்லாம் அனுபவித்துச் சாப்பிட வேண்டும் என்பதற்கும் புத்தகம் எழுதப்பட்டால், அதை வாங்குவதற்கும் என்னைப் போன்றோர் இருக்கத்தான் செய்வார்கள். சமையல் என்பது ஓவ்வொரு பகுதிக்கும் வேறுபடும். அது அந்தந்தப் பகுதியில் வசிப்பவர்களது உணவின் தாகத்தைப் பொறுத்தும், தாகம் தீர்க்கும் தண்ணீரின் சுவை பொறுத்தும், மண்ணில் விளையும் பயிர் பொறுத்தும், கிடைக்கப் பெறும் பொருள் பொறுத்தும் நிர்ணயிக்கப்படும். ஆனால், ஒருவரது நா சுவையானது, என்னதான் முதலில் மண் வாசனை மாறாது, உணவை உண்டு வந்திருந்தாலும், அவர்கள் செல்லும் பகுதிக்கேற்ப, நாவானது புதுப்புது சுவைகளை மனதில் நிறுத்திக் கொள்ளும்.
நாவிற்கும், நாசிக்கும் ருசி தெரியாமல், சமையல் எனும் ஒரு கலை பிறந்திருக்க வாய்ப்பில்லை.
நமது முன்னோர்கள் கேப்பைக் கூழ், கம்புக் கூழ் என்று பலதரப்பட்ட கூழ்ம நிலை உணவுகளை எடுத்துக் கொண்டனர். அதனால்தான் என்னவோ, அவர்கள் சாப்பாடினைச் சாப்பிடும்போது அவர்களது கைகளை முழுமையாகப் பயன்படுத்துவார்கள். அதாவது, சோற்றினை ஐந்து விரல்களால் நன்றாகப் பிசைந்து, அப்படியே அதனை உள்ளங்கைகளில் உருட்டி, திரட்டி உருண்டை செய்து அப்படியே வாயில் போட்டு நன்றாக மென்று தின்றார்கள். ஆனால், இன்றைய நமது தலைமுறையினரோ, உள்ளங்கை வரை இருந்த சோற்றுடனான உறவினை வெறும் விரல் வரை மட்டுமே வைத்து இருக்கிறோம். அள்ளித் தின்னாமல் நுனிப் புல் மேய்வதைப் போல, மெதுவாக கிள்ளித் தின்கின்றோம். இன்னும் சிலரோ, அதையும் நிறுத்திவிட்டு கரண்டிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
சிலர் சாப்பிட்டுவிட்டு அதன் சுவையினை வர்ணிப்பதைக் கேட்டாலே, சிலருக்கு அந்த உணவைச் சாப்பிட வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு அவர் அனுபவித்ததை, சுவைக்க சுவைக்க எடுத்துக் கூறுவார்கள், கேட்பவர்களைச் சுவைக்கத் தூண்டும் அளவிற்கு. அதே நேரம், சுவைத்த உணவு பிடிக்காவிட்டாலும், அவர்கள் அதை வர்ணிப்பதில் இருந்தே அந்த உணவைப் புசிக்க வேண்டுமென்ற பசி அடங்கிவிடும் பலருக்கும்.
உதாரணமாக, "Discovery" தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியில் ஒருவர், தான் வழியில் தென்படும் சிலவற்றை உணவாக உட்கொள்வதை வர்ணிப்பதை எடுத்துக் கொள்ளலாம். அவருக்குப் பிடித்திருந்தால், "இந்தச் சுவையானது வான் கோழியின் இறைச்சியினைப் போலவே அற்புதமாக இருக்கிறது, மேலும் நான் இதை நன்றாக தீயில் சுட்டுவிட்டதால் இதிலிருந்து ஒருவித நறுமணமும் வருகிறது, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது" என்பார். மற்றொரு வேளையில் "இந்தப் புழுவினைச் சாப்பிடும்போது, ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. அது எப்படி இருக்கிறது என்றால்? ஒருவாரம் துவைக்காத "socks" துணியினை தண்ணீரில் கரைத்து வைத்தால் எந்த அளவிற்கு துர்நாற்றம் அடிக்குமோ, அது போன்றதொரு துர்நாற்றம் எனது நாசியில் தெரிகிறது" என்பார். இப்படிப்பட்ட விளக்கம் கொடுத்த பிறகு எவருக்கேனும் அதைச் சுவைக்கத் தோன்றுமா?
அநேகமாக பலரும், சில விசயங்களை எடுத்துக் கூறுவதற்கு சாப்பாட்டின் சுவையினைத் தான் எடுத்துக் காட்டுவார்கள். எனது பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரியர் அடிக்கடி ஒன்றைக் கூறுவார். ஏதாவது முக்கியமான பகுதியினைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, "நான் சொன்னதெல்லாம் உங்க மனசுல எப்படி பதியனும் தெரியுமா? இருட்டுக்கடை அல்வா சாப்பிட்டா எப்படி, தொண்டையில சிக்காம வழுக்கிக்கிட்டு போகுதோ, அந்த மாதிரி உங்க மனசுல உடனே மிக எளிமையா போகனும்" என்று சொல்வார். இதுபோன்ற பல சம்பவங்களை அடுக்கிக் கூற இயலும். சாப்பிடும் உணவை நன்றாக அனுபவித்து சாப்பிடுவதால்தான், அவர்கள் மனதில் இந்த சுவையானது பதிந்து போய் இருக்கிறது. "பசு மரத்தாணி" என்பதை மாற்றிக் கூறியவர் இவர்தான். இவர் சொன்ன உதாரணம் எவ்வயதில் படிப்பவருக்கும் பொருந்தும்.
எப்படிச் சிலர், தம் உணவினை அழகாக வர்ணிக்கிறார்களோ, அதைப் போலவே சிலர் தாம் சாப்பிடும் உணவை அழகாக சாப்பிடுவார்கள். அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்தாலே, நமக்கும் சாப்பிடத் தோன்றி விடும்.
சிறு வயதில் என்னுடைய தந்தை, ஆட்டுக்கறி சாப்பிடுகையில் "என்னய்யா எலும்பையெல்லாம் சாப்பிடாம வச்சு இருக்க?" என்பார். அத என்ன பன்றது என்று மனதுக்குள் கேள்வி எழும் முன் அவர் செய்து காண்பித்தது இன்னும் நினைவிருக்கிறது.. அப்படியே வாயில் வைத்து சுவைத்து ஒரு உறிஞ்ச வேண்டும் என்று சொல்வார். ஆனால், எனக்கு என்னவோ வெறும் காத்துதான் வந்தது.
சமைத்தவர் மனம் மகிழ வேண்டுமென்றால், அவர் தனது சமையலைப் புசிப்பவரைக் கண்டால் மட்டுமல்ல, அவர்களது ஒரு சில நல் விமர்சனங்களே அவ்ர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை.
மே மாதம்,கஜினி,சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற பல படங்களில் டீ சாப்பிடுவதைக்கூட அழகாக காட்சிப்படுத்தி இருப்பார்கள்.
இப்போ சொல்லுங்க, சமைப்பது எப்படி ஒரு கலையோ, சாப்பிடுவதும் ஒரு கலைதானே.?
இதைப் படித்துவிட்டு, 'கரிசக் காட்டு பூவே' படத்தில் நெப்போலியன் அவர்கள் "சாப்பிடுவது எப்படின்னு செஞ்சு காண்பித்தேன்" என்று பக்கத்தில் இருப்பவரது இலையினைக் காலி செய்யாதிருந்தால் போதும்.
சமைக்கும் உணவின் வாசமானது அன்றோடு மறைந்தாலும், சுவைத்த உணர்வானது என்றும் மனதில் நீங்காது நிற்கும்.