என் 'இதழ் பிடித்த' கவி,
என் இதழில் படிந்த கவி,
படிக்கின்ற இதழ்கள்-
பிடித்திட்ட கவி,
பிடித்திட்ட விரல்கள்
பற்றிய கவி,
பற்றிக் கொண்ட
நெஞ்சங்களின் கவி,
நெஞ்சங்களின்
நெஞ்சார்ந்த
மோகங் கொண்ட கவி,
மோகத்தில் தாகம்
தணித்த கவி,
தணிந்தும்
தணியாதிருந்த
கூடல் கொண்ட கவி-எனக்
கவியணைத்தையும் சேர்த்திட்ட,
உதிரிக் கவிகள்...
3 comments:
Pinra Ma! Good.
கவி பிடித்து விட்டது என்னை...!
நன்றி செந்தில் & தனபாலன் அவர்களே
Post a Comment