சில பொருட்கள் வாங்குவதற்காக அருகிலிருக்கும் ஒரு சூப்பர் மார்கெட்டிற்குச் சென்றிருந்தேன், அநேகமாக பல சூப்பர் மார்க்கெட்டுகளிலும் MRP விலையினை விடக் குறைவாக விற்பது கிடையாது. வெகு சிலப் பொருட்களை மட்டுமே அவர்கள் குறைத்து விற்பார்கள். அந்தப் பொருட்கள் என்னவென்று அறிந்து வாங்குவது என் வழக்கம். மற்ற பொருட்களை எங்கள் பகுதியிலிருக்கும் சிறிய கடையிலேயே வாங்கிக் கொள்வேன்.
அன்றும் அப்படித்தான், சரி வெளியில் செவ்வாழை 15 ரூபாய் அளவில் விற்பதால், இங்கு என்ன விலையென்று பார்க்கலாம் என்று தேடினேன். அப்பொழுதான் பழ வகைகள் எல்லாம் வந்து கொண்டிருந்தன. எனவே, அங்கு வேலை செய்யும் ஒரு பெண்ணிடம், "செவ்வாழை இருக்கா?" என்று கேட்டேன். அதற்கு அந்தப் பெண், "என்னண்ணா?" என்றார். நானும் "செவ்வாழைப் பழம் வந்திருச்சா?, எங்க இருக்கு?" என்றேன். உடனே அவர், அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணிடம், "ஏண்டி, செவ்வாழைன்னா, என்னது டீ" என்று கேட்க, அவரும், "அதான்டீ 'Red Banana' என்று சொல்லிக்கொண்டே என்னிடம் "அதானண்ணா?" என்று கேட்க நானும் ஆமென்று தலையாட்டினேன்.
எனக்குத் தமிழில் சில வார்த்தகளைப் பேசுவது, சொல்வதென்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையும், வாழை ரகத்தில் ஒன்றுமான செவ்வாழையினை என்னவென்று தெரியாத அவரை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. சச்சினைத் தெரியாதுன்னு சொன்ன மாதிரி இதுவும் நமக்கொரு/எனக்கொரு பெரிய பிரச்சனையாகவேபட்டது.
மனதுக்குள்ளே 'உன் குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல' என்ற பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது.

அவர் கேட்டது எனக்கு "STD-ன்னா வரலாறுதான?" என்பதுபோல இருந்தது. :(கடைக்கு முதலாளியாய் இருக்கும் அந்த அம்பானிக்கு செவ்வாழையென்றால் என்னவென்றுத் தெரிய வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இது அவரது மொழியல்ல. ஆனால் கடையில் வேலை செய்யும் நமது இந்த அம்மணிக்குத் தெரிந்திருக்க வேண்டுமல்லவா?
எனக்குத் தமிழில் சில வார்த்தகளைப் பேசுவது, சொல்வதென்றால் அவ்வளவு பிடிக்கும். அப்படிப்பட்ட ஒரு வார்த்தையும், வாழை ரகத்தில் ஒன்றுமான செவ்வாழையினை என்னவென்று தெரியாத அவரை நினைத்தால் வருத்தம்தான் வருகிறது. சச்சினைத் தெரியாதுன்னு சொன்ன மாதிரி இதுவும் நமக்கொரு/எனக்கொரு பெரிய பிரச்சனையாகவேபட்டது.
மனதுக்குள்ளே 'உன் குத்தமா? என் குத்தமா? யார நானும் குத்தம் சொல்ல' என்ற பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது.
1 comment:
தில்லு முள்ளு படத்தில் வரும் short name சுப்பி sir தான் ஞயாபகம் வருது
Post a Comment