கொஞ்சமாய் சிரித்து
என்னை நிறைய
சிறை பிடித்திட வாராய்...
கொஞ்சமாய் அழுது
என்னை நிறைய
அழச் செய்திட வாராய்...
கொஞ்சமாய் கொஞ்சி
என்னை நிறைய
கெஞ்சிடச் செய்திட வாராய்...
கொஞ்சமாய் அழுக்காகி
என்னை நிறைய
அழுக்காக்கிட வாராய்...
செல்லமாய்,
மெல்லமாய் உதைத்து,
மெல்ல என் இதயம்
தழுவிட வாராய்...
கொஞ்சம்
கொஞ்சும் கைகள் கொண்டு
கொஞ்சமாய் என்
கரம் பிடித்திட வாராய்...
உன் மெய்யினைச் சேரும் என்று
பொய்யாய்,
உன் தாய் வழி
உன்னைச் சேர்ந்திடும்
உனக்காய் நான் தந்த
என் முத்தங்கள் எல்லாம்
உன்
மெய்யினில்
மெய்யாய் தந்திட,
மெய் தரிசனம் தந்து வாராய்...
என்னை நிறைய
சிறை பிடித்திட வாராய்...
கொஞ்சமாய் அழுது
என்னை நிறைய
அழச் செய்திட வாராய்...
கொஞ்சமாய் கொஞ்சி
என்னை நிறைய
கெஞ்சிடச் செய்திட வாராய்...
கொஞ்சமாய் அழுக்காகி
என்னை நிறைய
அழுக்காக்கிட வாராய்...
செல்லமாய்,
மெல்லமாய் உதைத்து,
மெல்ல என் இதயம்
தழுவிட வாராய்...
கொஞ்சம்
கொஞ்சும் கைகள் கொண்டு
கொஞ்சமாய் என்
கரம் பிடித்திட வாராய்...
உன் மெய்யினைச் சேரும் என்று
பொய்யாய்,
உன் தாய் வழி
உன்னைச் சேர்ந்திடும்
உனக்காய் நான் தந்த
என் முத்தங்கள் எல்லாம்
உன்
மெய்யினில்
மெய்யாய் தந்திட,
மெய் தரிசனம் தந்து வாராய்...
No comments:
Post a Comment