Wednesday, December 31, 2008

புத்தாண்டு நல்வாழ்துக்கள்

எழுதி முடிக்கப்படாத,
தான் எழுதிடா,
'வ்ரலாறு' எனும் சுயசரிதையினைக்
கொண்டவன்...

"வாழையடி வாழையாய்"
என்பதற்கு உவமை
நாயகன்...

வருடந்தோறும் செத்துப்
பிழைக்கும் இந்தப்
புத்தாண்டில்...

நம் இன்னல்கள் செத்து
நம் மகிழ்ச்சிகள் பிழைத்திட...

நம்
நினைவுச் சுவடுகளில்
வரவாய் மகிழ்ச்சியும்
செலவாய் துக்கங்களும்
இருந்திட...

இவ்வருடம்
சோகங்கள் எவையும்
சோபித்திடாது,
மகிழ்ச்சி
மட்டும் மலர்ந்திட
மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

-- இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்--

Wednesday, November 19, 2008

நினைவாணிகள் - பாகம் இரண்டு

எனது கிராமத்து கோயில் திருவிழாக்கள்,

திருவிழா என்றால் எங்கிருந்தோ ஒரு பாட்டி வந்து கலர் கடிகாரம்,கலர் கண்ணாடி, விசில், மற்றும் பல பொருள்களும் குறிப்பாக பெண்களுக்குத் தேவையானவைகளை அதிகாமகக் கொண்டு வந்து விற்பனை செய்யும்.

என்னதான் ஓலையில் கடிகாரம் கட்டி விளையாண்டாலும் அந்த வண்ணக் கடிகரத்தைக் கட்டிச் சுற்றுவதில் அவ்வளவு மகிழ்ச்சி,அதிலும் 50 பைசாவுக்கு விசில் ஒன்றை வாங்கி வாயில் வைத்து ஊதிக் கொண்டே சுற்றினால் அந்த திருவிழாவே களை கட்டுவதாக ஒரு எண்ணம் தோன்றும்.

மூன்று கோயில் திருவிழாக்கள் மட்டும் வெகு விமர்சையாகக் கொண்டாடப் படுவதுண்டு. அவை குச்சாரி அம்மன், பெருமாள் சாமி மற்றும் துர்க்கை அம்மன்.

முதலாவதாக குச்சாரி அம்மன்,
இது தான மிகப் பெரிய விழா. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாகக் கொண்டாடப்படுவது உண்டு. கோவில் விழாவானது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு ஒரு தேதி குறிக்கப்படும். அந்த தேதியன்று கன்னிப் பெண்கள் 10 பேரை கோவிலின் முன்பாக நிற்க வைத்து சாமிக்கு பூசை ந்டத்தப்படும்; இந்த பூசையின்போது எந்தப் பெண்ணிற்கு சாமி வருகிறதோ அந்தப் பெண் அந்த வருடத்தின் சாமியாகக் கருதப்பட்டு அவளை, எங்கள் ஊரில் குச்சாரி அம்மன் இருப்பதாகக் கருதப்படும் வீட்டில் வைப்பர்,கோவில் விழா முடியும் வரை அங்குதான் இருக்க வேன்டும். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து சாமி சிலையானது ஆற்றில் கரைக்கும் நிகழ்வுடன் முடிவடையும். அந்த ஏழு நாட்களில் 5 நாட்கள் காணிக்கை பெறுவதற்காக அந்தப் பெண்ணை பக்கத்தில் உள்ள ஊருக்கு நள்ளிரவில் அழைத்துச் செல்வார்கள் ; என்னே ஒரு அதிசயம் ! மற்ற எவரும் முன்னால் செல்ல தயங்கும் இடஙளில் இந்த பெண் மட்டும் தைரியமாக வேகமாக செல்வதுண்டு. ( எல்லா வருடமும் )


அந்த 5 நாட்களிலும் சாமி சிலையினை செய்வார்கள்,களிமண் கொண்டு. அதைத் தனியாளாகத் தூக்குவது மிகக் கடினமே.
ஆறாவது நாள் சாமி சிலையானது சிலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்துச் செல்லப்படும்,எடுத்துச் செல்பவர் குறிப்பாக ஆறடிக்கும் மேல் இருக்க வேன்டும். பல்லக்கின் நடுவில் அவர் சிலையினைச் சுமந்து கொண்டு கோவிலுக்குச் செல்வார். 5 நிமிடத்தில் செல்லக்கூடிய தூரத்தை 30 நிமிடத்தில் சென்றடைவார். அந்தக் கட்சியினைக் காண்பதென்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில சமயஙளில் சரியாக தெரியவில்லை என்று எனது பாட்டி வீட்டு ஓட்டின் மேல் கூட ஏறியதுண்டு.

இப்படியாக ஆறாம் நாள் கழியும். அன்று இரவு அந்தப் பெண்ணை உள்ளூர் முழுவதும் வளம் வர வைப்பர். அப்போது கோவில்-காளை மாடும் உடன் இருக்கும். அதன் முதுகில் மேளம் கட்டி விட்டு மத்தளம் அடித்துக் கொண்டே வருவர்.

ஏழாவது நாள்,
அன்று காலை அனைவரும் கோவிலுக்குச் சென்று தேங்காய் உடைத்து வழிபடுவர். பிறகு அன்று மாலை சுமார் 4 மணி அளவில் சாமியை கண்மாயில் கரைக்க செல்வார்கள். கரைத்து முடித்ததும் பூசாரி கையில் வேப்பங் குலையுடன் கண்ணில் பட்டவர்களை அடித்துக் கொண்டே கோவிலுக்கு ஓடி வருவார்,அங்கு வந்ததும் அவருக்கு மஞ்சல் தண்ணீர் ஊற்றி பிற பூசைகள் நடத்துவார்கள்.

அன்று இரவு ஏதாவதொரு நாடகம் நடைபெறும், அத்துடன் விழா இனிதே நிறைவுறும்.

இதைப் போன்று பெருமாள் சாமி கோவில் விழாவும், துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.

---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

"கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" என்பதற்கு, எனக்கு சில சமயங்களில் பணி இல்லாத போது, வேலையற்ற வேளையில் அவ்வேளை(வேலை) எனக்கு சுட்டிக் காட்டிய ஓர் உதாரணம்...

வேலை இல்லா வேலைக்கு
காலை வேளையில், அதி -
காலையின் முதல்
வேலையாள் சேவலின்
வேலைக்கு முன்பே
வேலை மெனக்கெட்டு எழுந்து
வேகமாகச் செல்ல வேண்டி இருக்கிறது
வேலை இல்லாதபோதும்...

Saturday, July 26, 2008

நிழல்

ஒளி
ஒழி(ளி)ந்து போயின் உடன்
ஒழி(ளி)பவன்
நீ...
நிழல்!!!

Wednesday, July 23, 2008

நினைவாணிகள் -- பாகம் ஒன்று

படிக்கும்போது படித்தவைகள் பசுமரத்தாணி போலப் பதிய வேண்டும் என்று கூறுவார்கள். எனது மனதிலும் இத்தகைய ஆணிகள் நிறைய உண்டு.
இன்று படர்ந்து மரமாக நிற்கும் என்னுள் பதிந்துள்ள நினைவாணிகள் எத்தனை என்பதை என்னாள் முடிந்தவரை கணக்கிட்டு நினைவு கூர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

நினைவாணிகள் பாகம் ஒன்று

இதோ எனது முதல் பதிவாக நான் பிறந்த மண் பற்றி. நான் பிறந்தது தமிழகத்தின் வாழ்வாதாரமான கிராமம். கவிதையினைப் படித்து வளர்ந்தோர் மத்தியில் கவிதையினைப் பார்த்து வளர்ந்தவர்களில் நானும்
ஒருவன். எனது கிராமத்தைத்தான் கவிதை என்று கூறுகிறேன்.

ஒரு தீவு என்று குறிப்பிடும்போது நான்கு பக்கஙளும் நீரால் சூழப்பட்டது என்றும்; ஒரு தீபகற்பத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது மூன்று பக்கம் கடலாலும்,ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டது என்றும் கூறுவோம். அவ்வகையில் எனது கிராமத்தைப் பற்றிக் குறிப்பிட வேன்டுமென்றால்
நான்கு பக்கம் வறட்சியால் சூழப்பட்ட ஒரு பசுமையான கிராமம்.

பஞ்சம் தலை விரித்து ஆடும் என்று அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்,அதை கண்ணால் கண்டவன் நான். புரியவில்லையா?
எனது கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிகச் சிறிய கிராமம்...
"இராமநாதபுரம்" என்றதும் அனைவருக்கும் கண்டிப்பாக நினைவுப்படவேண்டியது அதன் வறட்சியே; அந்த வகையில் எனது கிராமமும் ஒரு விதிவிலக்கு அல்ல. நான்கு பக்கம் பசுமை என்று நான் குறிப்பிடக் காரணம் முள் மரங்கள்(கருவேல முள் மரம்) எனது கிராமத்தில் நிறைய
உண்டு, அது பார்ப்பதற்கு தலை விரித்து ஆடுவது போல இருக்கும். அந்த முள் மரத்தின் தன்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டத்தை குறைத்து விடும். எந்த ஒரு தீமைக்குள்ளும் ஓர் நன்மை இருப்பது போல இதற்குள்ளும் ஓர் நன்மை உன்டு. எங்கள் உடம்பில் கறி(சதை) நன்றாக வளர்ச்சியுற்று இருக்க இந்த விறகுக் கரியே காரணம். ஆம் விவசாயம் ஓய்வெடுக்கும் வேளையில் எங்கள் கிராமத்தில் பிரதான தொழில் கருவ முள் மரங்களை வெட்டி விறகு தயாரிப்பதே,இன்றளவும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அடுத்ததாக ஆலமரம்,
எமது கிராமம் எவ்வளவு பழமையானது என்பது இந்த ஆலமரதைக் கண்டால் போதும். எங்கள் கிராமத்தின் கல் வெட்டாய் இருப்பது இந்த ஆலமரம். சின்னஞ் சிறு பொடிசு முதற்கொன்டு மரம் ஏறி கூழாங் கற்களைக் கொண்டு அழகாக செதுக்கி வைப்பர் அவர்கள் பெயரை,அதில் நானும் எனது பெயரைப் பதித்ததுண்டு. படர்ந்து விரிந்த இது எங்கள் ஊரின் கண்மாய்
கரையின் எல்லையாகவே அமைந்து விட்டது. நீச்சல் அடிப்போர் எல்லோருக்கும் இக்கரையில் இருந்து அக்கரையில் உள்ள
இந்த மரத்தை அடைவதே குறிக்கோளாக இருக்கும்,போட்டி கூட உண்டு. அக்கரைக்கு சென்ற பின்பு ஆல மரத்தில் ஏறிச் சென்று,கண்மாய்க்கு மேலே தெரியும்படி உள்ள கொப்புகளை தேடிச் சென்று அதில்

இருந்து கண்மாயில் குதித்திடும் சுகம் யாருக்குக் கிடைக்கும். பின்னர் களி மண்ணைப் பூசிக் கொண்டு குளியல் இடுவது என எல்லா வால் தனங்களும் அரங்கேரும்.


அடுத்ததாக சுடுகாடு,
இந்த இடம் கூட பஞ்சத்தில் அடிபட்டது போலத்தான் இருக்கும். ( இடத்தின் அளவினைப் பற்றி) பொழுது போகாத தினங்களில் சுட்டெரிக்கும் வெயிலில் நாஙள் சுற்றித் திரிந்த ஒரு சுற்றுலாத்
தளம். அங்கு கிடைக்கும் கேந்திப் பூக்களை(இளஞ் சிவப்பு வண்ணதில்,பச்சை காம்புடன் இருக்கும்) எடுத்து வந்து ரோட்டில் வைது நசுக்கி விளையாண்டதுண்டு,மண்டை ஓடுகள் இருந்தால் வழக்கம் போல எத்தி
விளையாடியதுண்டு...

அடுத்தாக மாட்டு வண்டிகள்,
எனக்கு பத்து வயது இருக்கும் போது நிறைய வண்டிகள் இருந்தன, ஆனால் தற்போது சொற்ப அளவில் மட்டுமே உள்ளன. மாட்டு வண்டியில் செல்வதை விட, அதை நிருத்தி வைத்த பிறகு அதன் முகப்பில் இரு
பக்கமும் உட்கார்ந்து கொண்டு விளையடுவது தனி சுகம்தான்,
அதிலும் வண்டிக்கு சொந்தக்காரர் அருகில் இல்லாவிட்டால் படு குசி தான். அவர் இருந்தால் முகப்பு பழுதாகிவிடும் என்று எஙளைத் துரத்தி விடுவாரே.
அப்பொழுதெல்லாம் மாட்டிற்கும் எனக்கும் அப்படி ஒரு பிணைப்பு உண்டு,கீழே விழுந்து காயம் பட்டு விட்டால் எஙளுக்கு உடனடி மருந்து (டெட்டால்) மாட்டுக் கோமியம் அல்லது மாட்டுச் சாணம்தான்.
இப்படி விலங்கோடு விலங்காக வாழ்ந்த சுகமே தனி சுகம்தான்,இனி எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இப்படிப் பட்ட கிராமத்திலேயே பிறக்க ஆசைப்படுகிறேன்...


---"நினைவாணிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் இனிய நினைவுகள் தொடரும்"---

--அன்பன் வினோத்

Monday, July 21, 2008

இலக்கிய சிந்தனை - பொருள் பொருந்திடா மென்பொறியாளர்கள்?

ஒரு வலை தளத்தில் நான் படித்தது.

அதன் வலை தல முகவரியும்,அதில் குறிப்பிடப்பட்டவையும்...
http://nilavunanban.blogspot.com/2008/06/blog-post_10.html
//
கணிப்பொறி வல்லுனர்கள் என்றால் வார விடுமுறையில் கூத்து கும்மாளமிட்டு திரிபவர்களாக இச்சமூகம் கணித்து வைத்திருக்கின்றது. இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது என்பதை அனைவருக்கும் எடுத்துரைக்கவும் அவர்களை இம்முயற்சியில் ஈடுபடுத்தி மற்றவர்களை ஊக்கப்படுத்தவும் இந்த இதழ் வழிகாட்டியாக இருக்கும் என்று நம்புகிறோம்
//

இதோ எனது உரை...

மென் பொறியாளர்களைப் பற்றி அவர்கள் குறிப்பிட்டிருந்தது ' இலக்கிய உலகத்திலும் அவர்களின் பங்களிப்பு அதிகம் இருக்கிறது '. இந்த வார்த்தை அவர்கள் பயன்படுத்தியதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆயினும் இந்த சமூகத்தில் இருந்து மென் பொறியளர்கள் தனித்துப் பார்க்கப்பட ஆடம்பித்துவிட்டார்கள் என்பது மட்டும் தெளிவாக விளங்குகிறது.
நானும் ஒரு மென் பொறியாளன் என்பதால் மட்டும் இதை எழுதவில்லை ஒரு தமிழன் என்பதாலும்,தமிழ் கலாச்சாரம் பற்றிய சிந்தனை எனக்குள்ளும் ஓடுவதாலும் இதை எழுதுகிறேன்.



'தமிழ் இலக்கிய சிந்தனை அவர்களுக்கும் உன்டு'...
தலை குனியச் செய்யக் கூடிய வார்த்தைகள்...


அன்பிற்குரிய பண்பாளர்களுக்கு,
உஙளைப் போலவே, தமிழ் எனும் தாயின்
விளை நிளத்தில் விளைந்த எஙகளை மட்டும் ஏன்
தனிமைப் படுத்துகிறீர்கள்?
கூத்திட்டு கும்மாளம் இடுவோர் என சாடுவது எதனால்? எங்கள் கிராமத்தில் எப்படி மண் வாசம் கமழுமோ அதைப் போல எனது நாவிலும் தமிழ் மொழி வீசும்.
இது வரை எனது வாயில் இருந்து தமிழ் மணம் வீசியது உண்டு,ஆங்கில நாற்றம் வீசியது உண்டு, ஆனால் மது,புகை துர்நாற்றம் வீசியது இல்லை.
என்னைப் போன்றோர் பலர் இருக்கையில், இப்படி சாடுவது சரியா?
இப்படிதான் வாழ வேன்டும் என்பது தமிழ் மரபு அதை இம்மியளவும் பிசகாமல் கடை பிடிப்போர் எம்முள் பலர் உன்டு.எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...
நாங்கள் எல்லாம் குழுமையாக(அதி சுகமாக) இருப்பதாக எண்ணுவோர் பல உண்டு...
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது...
நாங்கள் குழுமையாக இருந்தாலும், நாங்கள் எல்லாம் ஒரு விளை நிலத்தில் மர நிழலில் வளரும் பயிர்களைப் போன்றவர்கள்...
எங்கள் வாழ்வினை தொலைத்துக் கொன்டிருக்கிறோம்,
யாம் வீணாக்கப்படுவது தெரியாமல் ( அதவது எஙளுக்கும் சில பாதிப்புகள்,கடினங்கள் உண்டு )
எனவே இனியும் ஓர் முறை இந்த மாதிரியான பாகு பாடு வேன்டாமே...



இந்த சமயத்தில் நமது வள்ளுவப் பெருந்தகையின் குறள் ஒன்றினைக் குறிப்பிட்டுச் சொல்ல் விரும்புகிறேன்

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

வாழ்க தமிழ்...
வளரட்டும் நல் எண்ணங்கள்...

--அன்பன் வினோத்

Saturday, July 12, 2008

வெடிக்கட்டும் கன்னி வெடி

------கனியும் கன்னியும் ஒன்று----------
கனியும் கன்னியும் ஒன்று
வெடித்த பலாக் கனி - பழுத்த கனி
வெடித்த கன்னி - பழுத்த கன்னி
---------------------------------------


தலைமுறைகள் அழிந்திடாதிருக்க
"கன்னிவெடி" - வெடித்திடாது
'கன்னி வெடி'த்திடட்டும்...

புதிய தலைமுறைகள் மலர்ந்திட
'கன்னி வெடி'த்திடட்டும்...

Saturday, July 5, 2008

தசாவாதாரம் - பிறர் பார்வையில் எனது ஓட்டம்

உலகத் தரம் வாய்ந்த தமிழ் சினிமாவை உருவாக்குவதற்கு உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் உலக நாயகன் கமலின் ' தசாவாதாரம் ' சினிமாவைப் பற்றி எனது விமர்சனம்.
என்னைப் பொருத்தவரை இது கமலின் வெற்றிப் படிக் கட்டுகளின் புதிய ஒரு படிக் கல். தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள் என்று ஒரு கூற்றும் உண்டு. அப்படியென்றால் இதுவும் அவ்வகையில் சேர்ந்த ஒன்றுதானா? என்று வினவினாள்,எனது பதில்
அப் படிக்கட்டுகளின் அருமை உணர்ந்தவர்களுக்கேஇக் கேள்விக்கான பதில் புலப்படும்.ஒரு பத்திரிக்கையில் இப்படத்தைப் பற்றி ஒரு விமர்சனம் -
' கதை என்னும் அஸ்திவாரம் இல்லாமல் எழுப்பப்பட்டஒரு பிரம்மாண்ட மாளிகை' . அப்படிப் பார்த்தால் நான்கு கோடி விந்துவின் சிறு துளியின் பிரம்மாண்டம் நமது 100 வருட வாழ்க்கை. இந்த நூறு வருடத்திற்கே மீச் சிறு துளி போதுமெனில் இரண்டரை மணி நேர சினிமாவிற்கு இவர் எடுத்துக் கொண்ட கதையின் கருவே போதுமானது. ஆகவே கருவின் வாழ்க்கையினைப் பார்க்க முயற்சியுங்கள் ( திரைக் கதை)பலர் இப்படத்தைப் பற்றி கூறுவது ' பொருள் ஒன்றை வீரட்டிப் பிடிப்பது மட்டும்' - அப்படிப் பார்த்தால் நமது புராண காலத்துக் கதைகளான ராமாயாணமும் மற்ற அனைத்தும் சிறு கருவை மட்டுமே கருவாகக் கொண்ட மாபெரும் காவியங்கள்.அந்த வகையில் இது கூட ஒரு காவியம் எனக் கொள்ளலாம்.அடுத்ததாக ' சம்பந்தம் இல்லாத காட்சி அமைப்புகள் ( படத்தின் தொடக்க காட்சி-12 ஆம் நூற்றாண்டு)' -இதைத் தான் அவர் கதையின் கருவாகக் கொண்டுள்ளார் , அதாவது சாவோஸ் வீதி மற்றும் வண்ணத்துப் பூச்சி வீதி' இதை புரிந்து கொண்டாள் மட்டுமே உங்களால் படத்தின்
பிற்பகுதிக்கும் முற்பகுதிக்கும் தொடர்பு கொள்ள முடியும்ஒரு
தமிழன் இத்துணை முயற்சி மேற்கொண்டு நமது தமிழ்
புகழ் பரப்புகிறான் என்றாள்
முதலில் நாம் அதை பாராட்டியே ஆக வேண்டும்...

ஆக குறை கூறுவதை விடுத்து கலைஞனின் அடுத்த கலைப் படைப்பான
மர்ம யோகியை தரிசனம் செய்ய ஆயத்தமாயிருங்கள்...

கலை மகனின்கலைப் புதல்வனை
கண் கலங்கச் செய்து விடாதீர்கள்...
இங்கனம்கலைஞனின்
சிறுரசிகன்--அன்பன் வினோத்

Friday, March 28, 2008

தீட்டு

*
தேவைப் பட்டால்
தீட்டு மென் மேலும்
தீட்டப் படட்டும்...



தேவைப் பட்டால்
தீட்டு
தீட்டுப் படட்டும்....


*

இறைவன் சந்நிதியில்
ஒரு
உயிர்
உதிரம் உதிர்க்க
அனுமதி இல்லை....>

*

எனினும்,
வேண்டுதலின் பெயரில்
உயிர் பழிக்கு
உட்படும் ஒரு
உயிர்
உள்ளே நுழைய
உரிமை உண்டு...


*

எனினும்,
ஒரு உயிரைத்
தருவிக்கும் விதம்
ஒரு உயிர் வழிக்காக,
உதிரம்
வடித்தால் , அவளுக்கு
உரிமை இல்லை...


*

இங்கே
தமிழ் இலக்கணம்
"இரட்டுற மொழிதலாய்"...

*


இந்த இரண்டிலும்
உதிர்க்கப் பாடுவது
உதிரமே, எனினும்
உரிமைகள் வேறு...


*


எனவே

வேள்விகள் எல்லாம்
கேள்விகளாகிப் போகின்றன;
யாககங்கள்
யாவும் சாபங்களாகிப் போகின்றன...

*


எனவே
தேவைப் பட்டால்



ஒரு
உயிர் பலிக்காக,
தீட்டு மேன்மேலும்
தீட்டப் படட்டும்...


ஒரு
உயிர் வழிக்காக,
தீட்டு
தீட்டுப் படட்டும்...

Tuesday, March 25, 2008

உயிர்த் துளி








ஆண்மை பெண்மை,
இவ்விருமைகளின்
கற்பனைக் கனவுகளின்,
சில நிமிட,
மரபு சார்ந்த,
புதுக் கவிதையின்
கண்ணீர்த் துளி நீ...
உயிர்த் துளி!!!

Saturday, March 22, 2008

மனிதம் காப்போம்(சிறு உரை)


மனிதர்களாகிய நாம், மரத்தின் பல்வேறு கிளைகளைப் போல, பல்வேறு மதங்களா(ல்)கப் பிரிவு கொண்டுள்ளோம். மரத்தின் கிளைகள் பல்வேறு இலைகளாகப்
பிரிந்துள்ளது போல, நாம் நம் மதத்திற்குள்ளும் பல்வேறு சாதிகளா(ல்)கப் பிரிவு கொண்டுள்ளோம்.ஆம், நாம் இப்படி பல்வேறாகப் பிரிவு கொண்டு இருந்தாலும் ,

"மனிதம்" எனும் நமது மூலம் ,மரத்தின் ஆணி வேரினைப் போல,

"அன்பு" எனும் ஆணி வேரினால் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து ,


"யாதும் ஊரே யாவரும் கேளீர்"

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"-என்பதை



மனதில் நிறுத்தி
மனிதம் வளர்ப்போம்...
மனிதம் காப்போம்...

Friday, March 21, 2008

பிச்சைக்காரன்


*

இரந்தால்,

இறந்தவராகிவிடுவர்

இவ்வுலகிலிருந்து...

*

உணவுக்காகத்தான், எனினும்

உண்ணாமல் யாசிக்கிறான்;

உண்மை என்னவோ?

*

பேருந்தின்

இயக்குநர்களைப் போல,

படிக் காசு

பெறுகிறான்,ஏதேனும்

படியில்

படிந்து கொண்டு...

*

தினமும்

படிக் காசு

பெறுவதால்,

தினக் கூலி

இவன்தானோ?

*

நிலைமை

வறுமை எனினும்

இவன் மனதில்

இல்லை வறுமை

... யாரேனும்

யாசகம் செய்வோர்

வருவார், என எண்ணுவதால்...

*

இயந்திர உலகில்,

இயாங்காமல் இயங்கியே

இயந்திரமாகிப் போனான்

... இவன் பிச்சைக்காரன்!

நண்பனுக்காக



*
எமக்குப் பின்னர்
காலம் தாழ்ந்து
வந்திருந்தாலும்,
வல்லமையில்
தாழ்ந்திடாதவன் நீ...
*
உன்
உடலால் அல்லாமல்,
உன் இன் சொற்களால்
வழுப் பெற்றவன் நீ...
*
மருத்துவ
அறிவியலால்
அறிய இயன்றது-
"நீ ஒரு
கிட்டப் பார்வையாளன்" என்று...
உனது
மதியின்
மகத்துவத்தால்
யாம் அறிய இயன்றது-
"நீ ஒரு தூரப்
பார்வையாளன்" என்று...!
*
"தூரப்
பார்வையாளன்"-விளக்கம்
இதோ...
உனது
உள்ளப் பங்கீட்டால் (பொங்கீட்டால்)
தொலை நோக்குப்
பார்வையாளன் நீ...
*
காலத்தை வீணாக
தொலைப்பதை,
தொலைக்க முடியாத
தொல்லைவாதி நீ...
*
"இன்றைய ராசி பலன்"-
இதை
இம்மியளவும் விரும்பாதவன்;
ஆதலால்,
இரசிக்கு
இராசி
இல்லாமல் போனவன் நீ...
*
இன்னும் நிறைய
இருக்கிறது,
இருந்தும்
இப்போதைக்கு
இது போதும்...


வாழ்த்துக்கள் நண்பனே...

Thursday, March 20, 2008

கலப்புத் திருமணம்

மண்ணில் உள்ள

மதி கொண்ட

மனிதர்கள்,

மதம் மாறி,சாதி

மாறி திரு-

மணம் புரிவது, கலப்பு

மணம் இல்லை என்று

மார் தட்டி மறுப்பர்,

மனித இனதிற்குள்

மணம் என்பதால்...

Wednesday, March 19, 2008

தவறு

தவறென

தவறாக எண்ணத்

தவறாதவையும்

தவறாகின்றன...

Tuesday, March 18, 2008

சிவப்பு விளக்கு

*

இவள்

வெட்கப்பட்டாள், தான்

வெட்கப்படாததற்கு...

*

சிவப்பிற்கு,

வெட்கத்தை அரிதாரம் பூசி

அழகூட்டியவள்

இவள்...

*

இவள்

வெட்கப்பட்டாள் அவ்-

வெட்கததிற்கு அழகு...

வெட்கமே

வெட்கப்பட்டால்?

.... வெட்கக்கேடு!

*

வெட்கத்தாள் சிவப்பது

இவள் முகம்; வெட்கமில்லா

இவ்விடமும் சிவந்தது

இதன் பெயர்

முதற்கொண்டு...

*

வெட்கமில்லா

இவ்விடமும் வெட்கப்பட்டது,

இவள் வெட்கப்படாததற்கு!!!

.... இடம் சிவப்பு விளக்கு!!!

Friday, March 14, 2008

இரட்டுற மொழிதல்


மறைந்த தமிழன் சுஜாதவிற்காக...

தமிழால் பெருமை கொண்டவர்கள் பலர்.தமிழைப் பெருமைப்படுத்தி அவர்களால் தமிழ் பெருமை கொண்டது சிலரால்;அந்த சிலரில் இவரும் ஒருவர்...

இரட்டுற மொழிதல்

=================

தமிழனுக்கு மட்டுமல்ல,

தமிழுக்கும்

இலக்கணமாய் இருந்தவன் நீ! ..

உன் பெயரினில்

உண்டு அந்த இலக்கணம் ,

சுஜாதா! -

"இரட்டுற மொழிதல்"

ஒரு மொழி-நீயாய்

மற்றொன்று உன் துணைவியாய்!!!

குறிப்பு:-

---------

இரட்டுற மொழிதல் :- இரு பொருள் பட ஒரு சொல்லோ,ஒரு சொற்றொடரோஅமைத்துக் கூறுவது...

Thursday, March 13, 2008

இயக்கம்


இயந்திர உலகில், ஓரிடத்திலேயே

இயங்காமல் இருந்து

இயங்கினான்...

இயாங்காமல் இயங்கியே

இயந்திரமாகிப் போனான்

... இவன் பிச்சைக்காரன்!