Friday, March 28, 2008

தீட்டு

*
தேவைப் பட்டால்
தீட்டு மென் மேலும்
தீட்டப் படட்டும்...



தேவைப் பட்டால்
தீட்டு
தீட்டுப் படட்டும்....


*

இறைவன் சந்நிதியில்
ஒரு
உயிர்
உதிரம் உதிர்க்க
அனுமதி இல்லை....>

*

எனினும்,
வேண்டுதலின் பெயரில்
உயிர் பழிக்கு
உட்படும் ஒரு
உயிர்
உள்ளே நுழைய
உரிமை உண்டு...


*

எனினும்,
ஒரு உயிரைத்
தருவிக்கும் விதம்
ஒரு உயிர் வழிக்காக,
உதிரம்
வடித்தால் , அவளுக்கு
உரிமை இல்லை...


*

இங்கே
தமிழ் இலக்கணம்
"இரட்டுற மொழிதலாய்"...

*


இந்த இரண்டிலும்
உதிர்க்கப் பாடுவது
உதிரமே, எனினும்
உரிமைகள் வேறு...


*


எனவே

வேள்விகள் எல்லாம்
கேள்விகளாகிப் போகின்றன;
யாககங்கள்
யாவும் சாபங்களாகிப் போகின்றன...

*


எனவே
தேவைப் பட்டால்



ஒரு
உயிர் பலிக்காக,
தீட்டு மேன்மேலும்
தீட்டப் படட்டும்...


ஒரு
உயிர் வழிக்காக,
தீட்டு
தீட்டுப் படட்டும்...

No comments: