Tuesday, November 2, 2010

இப்போதெல்லாம்...

இப்போதெல்லாம்
எதைக் கேட்டாலும்,
எதைப் பார்த்தாலும்,
எதைச் சாப்பிட்டாலும்,
எனக்குள்
ஏதோ
ஓர் சிந்தனை...

"அடிக்கிற கைதான் அணைக்கும்" - என்ற
அந்தப் பாடலைக் கேட்கும்போது - Function/Method Overloading ஆகவும்;

பச்சோந்தியினைப்
பார்க்கையில் - RunTime Polymorphism/Factory Method ஆகவும்;

"அப்பன் புத்தி அப்படியே"
என்று பிறர் சொல்லக் கேட்கும்போது - Overriding/Inheritance ஆகவும்;

பாலினைப்
பருகையில் - Abstract Class ஆகவும்; (OwnMethod - Milk; InterfaceMethods: Tea/Coffee)

உருவகம் செய்து கொண்டிருக்கிறேன் -
நேர்முகத் தேர்வுக்கு தயாராகிறேனாம்... ??!!??

Sunday, October 17, 2010

கொள்வதால் கொல்கிறேன்

அள்ளி அணைக்க
ஆசையோடு
நானிருக்க,
நாணம் கொண்டு
நீ
நின்றால்
நான் என்ன செய்ய...?

உன்னை மட்டுமே அணைக்கத்
தெரிந்த எனக்கு,
உன் நாணமும்
அணைக்கத் தெரியுமடி...

முள்ளை முள்ளால் எடுப்பது போல்,
நான் உன்னை
அணைக்கும்
அணைப்பில் அந்த
நாணம் கூட
நாணம் கொண்டோடுமடி...

நாணம்-கொள்ள நீ தயாரெனில்,
நாணம்-கொல்ல நானும் தயார்...

அன்பே வா...
கொள்ளு(ல்லு)ம்
விளையாட்டை விளையாட...!!!