Thursday, February 2, 2017

மனக் கணக்கு

சமீபத்தில் பாக்கியராஜ் அவர்கள் நடித்த "எங்க சின்ன ராசா" படத்தை பார்த்தேன். சித்தியின் வளர்ப்பில் வளர்க்கப்படும் ஒரு நாயகனின் கதை. "எங்க சின்ன ராசா"  படத்தில் கதையின் நாயகன், தனது சித்தியின் மீது அளப்பரிய அன்பும்,அளப்பரிய நம்பிக்கையும் வைத்திருப்பார். படம் நெடுக்கில் வரும் பல்வேறு காட்சிகளை அதை அவ்வப்போது காண்பித்து இருப்பார்கள் படத்தின் கடைசி பகுதியில், விஷம் வைத்த உணவை சாப்பிட்ட பிறகும் அவர் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கையில் "நான் மருத்துவம் எடுத்துக் கொண்டால், அது என் சித்திமேல நான் வச்சிருக்கிற நம்பிக்கை பொய்யாகிரும், அதனால நான் வரமாட்டேன்" என்று வீம்பு பிடித்து  இருப்பார். இந்தப் படத்தில் எனக்கு மிக மிகப் பிடித்த வசனம் மற்றும் காட்சி இதுதான். இதை வைத்து ஒரு கட்டுரை எழுத தோன்றிய எண்ணத்தின் விதையே இந்தக் கட்டுரை.

வின்னர் படத்தில் ஒரு காட்சியில், வடிவேலு மற்றும் பிரசாந்த் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்று...

வடிவேலு: "இப்போ நம்மகிட்ட ரெண்டு பிஸ்கட் பாக்கெட் இருக்கு, அண்ணன் உள்ள போயி துணி எடுக்கிறவரைக்கும் இதுல ஒரு பக்கெட்ட எடுத்து ஒன்னொன்னா வீசனும். துணி எடுத்துட்டு வெளிய வரும்போது மீதி இருக்கிற பக்கட்ட எடுத்து ஒன்னொன்னா வீசனும். என்ன புரியுதா?"

பிரசாந்த்: "அண்ணே, நீங்க உள்ள போயி துணிய எடுத்திட்டீங்களான்னு எனக்கு எப்படிண்ணே தெரியும்"

வடிவேலு: "எல்லாம் மனக் கணக்குத்தான்"

அந்த மனக் கணக்கினைப் பற்றித்தான் இந்த பதிவு. இது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒரு கணக்கு இல்லை, உயிருள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் இது பொருந்தும் என்பது எனது கணிப்பு. தான் ஆடாவிட்டாலும் தன தசை ஆடும் என்று சொல்வார்கள், அதுவும் இதில் அடக்கம்தான். தளபதி படத்தில், நாயகனின் தாயார் ஒரு காட்சியில் நாயகன் வதைபடும்போது பதறித் துடித்து எழுவாரே அது இதற்கு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

நீங்கள் சமையல் கலைஞர்களை கவனித்துப் பார்தால் ஒன்று புலப்படும் (தற்போதைய நவீன யுக கலைஞர்களை தவிர்த்து). அவர்கள் பெரும்பாலும் சமையல் செய்கையில் அவர்களுக்கென்று ஒரு கணிப்பினை வைத்து இருப்பார்கள், அவர்கள் அளந்து கொடுக்கும் பொருளின் அளவானது அவ்வளவு துள்ளியமாக இருக்கும். சாம்பார் செய்ய வேண்டுமென்றால் அதற்கு எவ்வளவு தண்ணீர், காய் கறி, உப்பு, மிளகாய் தூள், மசாலா தூள் என சகலமும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பார். இதற்கெல்லாம் அவரது மனக் கணக்குதான் காரணம், அதாவது அவரது அத்தனை வருட அனுபவம் அவரை இந்த அளவிற்கு துல்லியமாய் இருக்க வைத்து இருக்கிறது. இதுபோலத்தான் ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கணிப்பினில் இவ்வுலகினில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறோம்.

நாம் "Bike" இல் செல்லும்போது, எவரேனும் குறிக்கிட்டால் அல்லது சற்று தூரத்தில் வளைவு இருந்தால் அதற்குத் தகுந்தவாறு நாம் நமது வேகத்தை குறைத்து கொண்டு லாவகமாக செல்வதும் ஒரு மனக் கணக்குத்தான். நாம் நமது உள்ளார்ந்த அசைக்க முடியாத நம்பிக்கையிலேயே நமது ஒவ்வொரு கணத்தையும் கடத்துகிறோம். ஒருவேளை அந்தக் கணிப்பானது தவறும் பட்சத்தில் நமக்கு இழப்புகளும் சேர்ந்தே வரும். வாகனததில் செல்லும்போது, நாம் வழக்கமாகச் செல்லும் வழியில் வேகத்தடை இல்லாத இடத்தில் திடீரெனெ முளைத்திருக்கும் வேகத்தடை இருந்தால், அந்த இடம் வரை எந்தவித சலனமும் இல்லாமல் செல்லும் நமது மனது, அதன் பிறகு, நமது வழக்கமான கணிப்புகளை எதிர்பார்ப்புகளையும் ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு, எதிர்வருவதைக் கணித்துஸ் செல்லாத தூண்டிவிடும்.

ஒரு சாதாரண,அன்றாட நிகழ்வுகளுக்கே நம்மை அறியாமலே இவ்வளவு மனக்கணக்கு வைத்திருக்கும் ஒரு மனிதனுக்கு, ஒரு மனிதன் மேல் வைத்திருக்கும் அசாத்திய நம்பிக்கை குழைந்து போனால்? 

Wednesday, November 9, 2016

புதுவன புகுதல்


 ஊழல் செய்த பணத்தின் மதிப்பு மட்டுமே செல்லாது போகிறது. ஊழல் செல்லாது போகவில்லை. இனி புதிதாய் செய்வோம், இனி செய்யும் ஊழலுக்கும்,பதுக்கும் பணத்திற்கும் கால மதிப்பானது அதிகம் என்பதை மனதில் வைத்து ஊழலும்,பதுக்கலும் இன்னும் சற்று தைரியமாக வலுப்பெறலாம். ஆக, இதை எவ்வாறு தடுக்கப் போகிறோம் என்றுதான் எண்ணம் ஓடுகிறது. பழையன கழிதலுக்கு வழி வகுத்த இவ்வரசு - புதுவென பழையனவே புகாதிருக்க வழி செய்திட்டால் நலம். இனி செய்யப்படும் ஊழலுக்கும்,பதுக்கலுக்கும் நாமும் ஓர் சாட்சியாய்/காரணமாய் இருக்கப் போகிறோம் என்பதை மனதில் வைத்து நாமும் நம்மால் இயன்ற முயற்சியினை/ஆதரவை வழங்க வேண்டியது அவசியம். சில நாள் அசவுகரியங்களை நமக்கு கொடுத்து, பல வருட பதுக்கலுக்கு மரண அடி கொடுத்த இவ்வரசுக்கு என்  வாழ்த்துக்கள். எனது தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் - செல்லாக் காசுக்களுடன்
- அன்பன் வினோத்.