தெரிந்த வார்த்தைகள்
தொடுத்து வந்த,
தெளிந்த
கவியோ?,
கட்டுரையோ? - இவ்விரண்டும்
கலந்த கலவையோ?
தெளிய - அள்ளிய
அறியா வார்த்தைகளை,
அறிந்து தொடுத்த
அருஞ்சொற்பொருளோ?
தான்தோன்றித்தனமாய்
வார்த்த வார்ப்போ?
கரு கொண்டு
உருவான கவியோ?
கவிக்காக கற்பனையாய்
உருவாக்கிய கருவோ?
உரு தரித்து - வரிகளால்(ய்)
உதிர்ந்த கருவின்
உருவோ?
அது
கவியோ?,
கட்டுரையோ?
என,
எதுவாயினும் எழுதத் துடிக்கிறது
எம் மனது - ஏனெனில்
எண்ணமெல்லாம் "தமிழ்"!!!
உடல்மேல் உயிர் வந்தொன்றுவது இயல்பே!
No comments:
Post a Comment