"கருத்து வேறுபாடு" பற்றிய பதிவுதான் இது.
ஒரு கருத்தில் - இரு நபர்களுக்கிடையேயோ, இரு ஊர்களுக்கிடையேயோ ஒருமித்த கருத்து ஏற்படாது போவதை கருத்து வேறுபாடு என்கிறோம். ஒரு நிகழ்வையோ, கருத்தையோ பற்றி ஒருவர் கூறும் விளக்கம் மற்றவருக்கு உடன்பாடு இல்லாது போவதைக் கூறலாம்; ஒருவருக்கு சரியெனப்படுவது மற்றவருக்கு தவறாக தெரிவதையும் கூறலாம்.
இதற்கு ஒரே வழிதான் இருக்கிறது - இருவர் தரப்பு வாதங்களையும் வைத்து எது? எப்படி? எப்போது? தவறாகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும். சில நேரங்களில்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அணுகுமுறை உள்ளது. அந்த முறையில்தான் அவரவர் பார்வையும் இருக்கும். சிலபேர், எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். சிலர் எதையும் மிக எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள். சிலர் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வார்கள். அதனால், ஒவ்வொருவரது பார்வையும் எப்படிப்பட்டது என்பதை அறிந்து நடந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.
சிலபேர் இருக்கிறார்கள், தான் பிடித்த முயலுக்கு மூணு காலுதான் என்பதுபோல, தமது தரப்பு தவறை ஒத்துக் கொள்ளவேமாட்டார்கள்.
வடிவேலு மற்றும் சரத்குமார் இருவரின் ஒரு காமெடி காட்சியில், சரத்குமார் அவர்கள் தான் பார்த்த படத்தைப் பற்றிக்கூறுவார். அப்போது அந்தப் படத்தின் பெயரை "தங்கப்ப-தக்கம்" என்பார். அதற்கு வடிவேலு அவர்கள் "என்னது தங்கப்ப-தக்கம்-ஆ, அது தங்கப்பதக்கம்" என்று சொல்லி கிண்டல் செய்வார். இருந்தாலும் சரத்குமார் "நான் என்ன முட்டாளா? இல்லை இந்தப் படத்தோட போஸ்டர் அடிச்சவன் முட்டாளா?" என்று கூறி என்று அச்சிடப்பட்டிருக்கும் படத்த்தின் போஸ்ட்டரைக் காண்பிப்பார். கடைசிவரை அந்தப் படத்தின் பெயரை தங்கப்ப-தக்கம் என்றே சொல்லிக்கொண்டிருப்பார். இது பொறுக்கமுடியாமல் இறுதியாக வடிவேலு அவர்கள் "அய்யா.... அந்தப் படத்தோட பெயர் தங்கப்ப-தக்கம்.... அப்படின்னே வச்சுக்கலாம்" என்று சொன்னதும், "என்னத்த.... வச்சுக்கிறது...?" என்று சரத்குமார் அவர்கள் தனது தவறை உணர்ந்து கோபம் கொள்வதுபோல அந்தக் காட்சி முடியும். அதனால, ஒருத்தரோட பார்வை என்னவென்று தெரியாமல் அவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கக்கூடாது.
சில நேரங்களில் இருதரப்பிலும் நியாயம் இருப்பதுபோல தோன்றும். உதாரணத்திற்கு, ஒரு புறம் இருந்து பார்த்தால் நமது கண்களுக்கு 6 போலத்தோன்றும், மற்றோரு புறத்தில் இருந்து பார்த்தால் அதுவே 9 ஆகத் தெரியும். இருவரது பார்வையிலும் தவறிருக்காது; அவர்களது கோணத்திலும் தவறிருக்காது. இருந்தாலும், இருவரும் மற்றவரது கோணத்தில் இருந்து பார்த்தால் இந்தப் பிரச்னைக்கு முடிவு கிடைத்துவிடும்.
ஒரு படத்தில் தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் தம்பிராமைய்யாவிடம் வேலை செய்யபவராக சூரி நடித்திருப்பார். அவரிடம்
த.ரா: சாம்பார்ல உப்பு இருக்கான்னு பாரு
சூரி: சாம்பாரை கிண்டி பார்த்துவிட்டு, உப்பு இல்லையே
த.ரா: சரி, ஒரு கரண்டி உப்பு எடுத்து போடு
சூரி: போட்டுட்டேன் முதலாளி
த.ரா: இப்போ பாரு

த.ரா: அடப்பாவி???
இந்த மாதிரி மத்தவங்க என்ன சொல்ல வர்றாங்க அப்படின்னே பல பேர் புரிஞ்சிக்கிறது இல்லை. நம்முடைய எண்ணங்களை சரியான நபரிடம்தான் பகிர்ந்துகொள்கிறோமா? என்பதை தெரிந்து நடந்தாலே நமக்கு தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகாது. இல்லையென்றால் "ஒரு மணி நேரமா விளக்கிச் சொல்லி கடைசியில - அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்" அப்படிங்கிறதுமாதிரி ஏமாற்றம் அடைய நேரிடும்.
இப்படி தமது தரப்பில் குறைந்தபட்ச நியாயம் கூட இல்லாமல் பலர் பிறர் மீது பழி சுமத்தி கொண்டுதான் இருக்கிறார்கள் .
சில சமயங்களில், தம்முடைய எண்ணங்களை அடுத்தவரது எண்ணமாக பாவித்துக்கொள்வார்கள். சிலமுறை நமக்குக்கூட இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டிருக்கும். நமக்குத் தெரிந்தவர் நம்மிடம் போன் செய்து, நமக்குத் தெரிந்த, அவருக்கு பழக்கப்படாத இடத்திற்கு வழி கேட்டால்.
"அப்படியே அங்க வந்துட்டியா? அங்கிருந்து நேராகப் பார்த்தால் ஒரு சின்ன பெட்டிக்கு கடை தெரியும் (எல்லாப் பக்கமும் கடை இருக்கும்), அதிலிருந்து நேராக போனால் நீ போக வேண்டிய இடம் வந்திடும்" இந்தமாதிரி நாம் அந்த இடத்த்தில் இருப்பதுபோல பாவித்து அவருக்கு வழி சொல்வோம். நாம் சொல்லும் ஒவ்வொரு அடையாளமும், அவருக்கு தெள்ள தெளிவாக விளங்கியதாகவே நாம் பாவித்துக் கொள்வோம். ஆனால் சில நேரங்களில், அவர்களுக்கு நாம் கொடுத்த தகவல் போதுமானதாக இல்லாமல் குழம்பி இருப்பார்கள். இருந்தாலும், எப்படிச் சொன்னாலும் புரிய மாட்டேங்குதே" என்று புழம்பிக்கொள்வோம்.
"கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்" என்பது போல எந்தவொரு நிகழ்வாயினும் அதன் உண்மைத் தன்மையினை தெரிந்து கொண்டு அதற்கேற்றார்ப் போல நமது செய்லகளை வைத்து இருக்க வேண்டும். இப்பொழுது இருக்கும் நவீன யுகத்தில் நமக்குக் கிடைக்கப் பெறுகின்ற பல செய்திகள் பெரும்பாலும் வதந்திகளாகவே இருக்கின்றன. அதன் உண்மைத்தன்மை அறிந்து நடக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரது கடமையாகிறது. நமது மொபைலில்/கணினியில் நாம் என்னென்ன செய்கின்றோமோ அதையெல்லாம் ஒரு பெரும் தகவல்களாகத் திரட்டி அதை நம்மிடமே ஒரு வியாபாரமாக மாற்றுகிறார்கள். நமது தரப்பில் இருந்து பார்த்தால் "என்னுடைய தகவல்களை எப்படி இவ்வாறு வியாபாரம் ஆக்கலாம்?" என்று தோன்றும். இதையே அவர்களது கோணத்தில் இதற்கு பெயர் "Technology...Big Data"
அதனால அந்த Angle-ல பார்த்தா எப்படி தெரியும், இந்த Angle-ல பாருங்க.

தவறென,
தவறாக எண்ணத்
தவறாதவையும்,
தவறாகின்றன...

"நம்ம ஊர்ல இருத்து பக்கத்து ஊருக்கு எவ்வளவு தூரம்? "
" - 2 km"
"சரி அப்ப, பக்கத்து ஊர்ல இருந்து நம்ம ஊருக்கு எவ்வளவு தூரம்?"
"...!?...?"
"தெரியாதா....? விவரம் பத்தாதுடா..."