Friday, March 28, 2008
தீட்டு
தேவைப் பட்டால்
தீட்டு மென் மேலும்
தீட்டப் படட்டும்...
தேவைப் பட்டால்
தீட்டு
தீட்டுப் படட்டும்....
*
இறைவன் சந்நிதியில்
ஒரு
உயிர்
உதிரம் உதிர்க்க
அனுமதி இல்லை....>
*
எனினும்,
வேண்டுதலின் பெயரில்
உயிர் பழிக்கு
உட்படும் ஒரு
உயிர்
உள்ளே நுழைய
உரிமை உண்டு...
*
எனினும்,
ஒரு உயிரைத்
தருவிக்கும் விதம்
ஒரு உயிர் வழிக்காக,
உதிரம்
வடித்தால் , அவளுக்கு
உரிமை இல்லை...
*
இங்கே
தமிழ் இலக்கணம்
"இரட்டுற மொழிதலாய்"...
*
இந்த இரண்டிலும்
உதிர்க்கப் பாடுவது
உதிரமே, எனினும்
உரிமைகள் வேறு...
*
எனவே
வேள்விகள் எல்லாம்
கேள்விகளாகிப் போகின்றன;
யாககங்கள்
யாவும் சாபங்களாகிப் போகின்றன...
*
எனவே
தேவைப் பட்டால்
ஒரு
உயிர் பலிக்காக,
தீட்டு மேன்மேலும்
தீட்டப் படட்டும்...
ஒரு
உயிர் வழிக்காக,
தீட்டு
தீட்டுப் படட்டும்...
Tuesday, March 25, 2008
உயிர்த் துளி
Saturday, March 22, 2008
மனிதம் காப்போம்(சிறு உரை)
பிரிந்துள்ளது போல, நாம் நம் மதத்திற்குள்ளும் பல்வேறு சாதிகளா(ல்)கப் பிரிவு கொண்டுள்ளோம்.ஆம், நாம் இப்படி பல்வேறாகப் பிரிவு கொண்டு இருந்தாலும் ,
"மனிதம்" எனும் நமது மூலம் ,மரத்தின் ஆணி வேரினைப் போல,
"அன்பு" எனும் ஆணி வேரினால் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது என்பதை உணர்ந்து ,
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"-என்பதை
மனதில் நிறுத்தி
மனிதம் வளர்ப்போம்...
மனிதம் காப்போம்...
Friday, March 21, 2008
பிச்சைக்காரன்
நண்பனுக்காக
*
எமக்குப் பின்னர்
காலம் தாழ்ந்து
வந்திருந்தாலும்,
வல்லமையில்
தாழ்ந்திடாதவன் நீ...
*
உன்
உடலால் அல்லாமல்,
உன் இன் சொற்களால்
வழுப் பெற்றவன் நீ...
*
மருத்துவ
அறிவியலால்
அறிய இயன்றது-
"நீ ஒரு
கிட்டப் பார்வையாளன்" என்று...
உனது
மதியின்
மகத்துவத்தால்
யாம் அறிய இயன்றது-
"நீ ஒரு தூரப்
பார்வையாளன்" என்று...!
*
"தூரப்
பார்வையாளன்"-விளக்கம்
இதோ...
உனது
உள்ளப் பங்கீட்டால் (பொங்கீட்டால்)
தொலை நோக்குப்
பார்வையாளன் நீ...
*
காலத்தை வீணாக
தொலைப்பதை,
தொலைக்க முடியாத
தொல்லைவாதி நீ...
*
"இன்றைய ராசி பலன்"-
இதை
இம்மியளவும் விரும்பாதவன்;
ஆதலால்,
இரசிக்கு
இராசி
இல்லாமல் போனவன் நீ...
*
இன்னும் நிறைய
இருக்கிறது,
இருந்தும்
இப்போதைக்கு
இது போதும்...
வாழ்த்துக்கள் நண்பனே...
Thursday, March 20, 2008
கலப்புத் திருமணம்
Wednesday, March 19, 2008
Tuesday, March 18, 2008
சிவப்பு விளக்கு
*
இவள்
வெட்கப்பட்டாள், தான்
வெட்கப்படாததற்கு...
*
சிவப்பிற்கு,
வெட்கத்தை அரிதாரம் பூசி
அழகூட்டியவள்
இவள்...
*
இவள்
வெட்கப்பட்டாள் அவ்-
வெட்கததிற்கு அழகு...
வெட்கமே
வெட்கப்பட்டால்?
.... வெட்கக்கேடு!
*
வெட்கத்தாள் சிவப்பது
இவள் முகம்; வெட்கமில்லா
இவ்விடமும் சிவந்தது
இதன் பெயர்
முதற்கொண்டு...
*
வெட்கமில்லா
இவ்விடமும் வெட்கப்பட்டது,
இவள் வெட்கப்படாததற்கு!!!
.... இடம் சிவப்பு விளக்கு!!!
Friday, March 14, 2008
இரட்டுற மொழிதல்
மறைந்த தமிழன் சுஜாதவிற்காக...
தமிழால் பெருமை கொண்டவர்கள் பலர்.தமிழைப் பெருமைப்படுத்தி அவர்களால் தமிழ் பெருமை கொண்டது சிலரால்;அந்த சிலரில் இவரும் ஒருவர்...
இரட்டுற மொழிதல்
=================
தமிழனுக்கு மட்டுமல்ல,
தமிழுக்கும்
இலக்கணமாய் இருந்தவன் நீ! ..
உன் பெயரினில்
உண்டு அந்த இலக்கணம் ,
சுஜாதா! -
"இரட்டுற மொழிதல்"
ஒரு மொழி-நீயாய்
மற்றொன்று உன் துணைவியாய்!!!
குறிப்பு:-
---------
இரட்டுற மொழிதல் :- இரு பொருள் பட ஒரு சொல்லோ,ஒரு சொற்றொடரோஅமைத்துக் கூறுவது...