கருவாட்டு
வாடையிலேயே,
வாராப்
பசியிலும் நன்கு
புசித்த
அந்த நாள் எங்கே?
வாடையிலேயே,
வாராப்
பசியிலும் நன்கு
புசித்த
அந்த நாள் எங்கே?
கரிப் புகையின்
வாடையினில் மிதந்து,
வந்த பசியிலும்
அரை குறையாய்
அன்னம் உன்னும்
இந்த நாள் எங்கே?
வாடையினில் மிதந்து,
வந்த பசியிலும்
அரை குறையாய்
அன்னம் உன்னும்
இந்த நாள் எங்கே?
காலார நடந்து,
எம் வயல் பார்த்தபடி,
எஞ்சோட்டுப் பசங்களுடன்
அளவளாவிய
அந்த நாள் எங்கே?
எம் வயல் பார்த்தபடி,
எஞ்சோட்டுப் பசங்களுடன்
அளவளாவிய
அந்த நாள் எங்கே?
இணைபிரியா நண்பனை
இணையதளத்தில்,
வலை(ளைத்துப்) பிடித்து
புரியாத பாசையில்
புரிதலில்லாமல் நட்பு காணும்
இந்த நாள் எங்கே?
இணையதளத்தில்,
வலை(ளைத்துப்) பிடித்து
புரியாத பாசையில்
புரிதலில்லாமல் நட்பு காணும்
இந்த நாள் எங்கே?
கிடைக்கும்
ஒரு ரூபாயில்
ஓராயிரம் சுகம்கண்ட
அந்த நாள் எங்கே?
ஒரு ரூபாயில்
ஓராயிரம் சுகம்கண்ட
அந்த நாள் எங்கே?
ஓராயிரம் ரூபாயிலும்
ஒரு சுகமேனும் காண
விளைந்திடும்
இந்த நாள் எங்கே?
ஒரு சுகமேனும் காண
விளைந்திடும்
இந்த நாள் எங்கே?
பண்டிகைகளை
பண்டிகைகளுக்காக கொண்டாடிய
அந்த நாள் எங்கே?
பண்டிகைகளுக்காக கொண்டாடிய
அந்த நாள் எங்கே?
பண்டிகையின்போது
ஊர் வந்து சேர்வதையே
பண்டிகையாகக் கொண்டாடும்
இந்த நாள் எங்கே?
ஊர் வந்து சேர்வதையே
பண்டிகையாகக் கொண்டாடும்
இந்த நாள் எங்கே?
சீரகம்,பூண்டு
தேங்காய் எண்ணெய் - சுடச் சுட
தேய்த்து
எண்ணெய் குளியலிட்ட
அந்த நாள் எங்கே?
...இவை அனைத்தும்
உணவில்கூட
காண முடிந்திடாத
இந்த நாள் எங்கே?
தேங்காய் எண்ணெய் - சுடச் சுட
தேய்த்து
எண்ணெய் குளியலிட்ட
அந்த நாள் எங்கே?
...இவை அனைத்தும்
உணவில்கூட
காண முடிந்திடாத
இந்த நாள் எங்கே?
நாற்பது மைல் கடக்க
நான்கு
நாள் யோசித்தவன்...
இன்று
நானூறு மைல் கடந்து,
சுற்றம் பறந்து - எதிலும்
பற்றும் துறந்து,
பந்தபாசம்
அற்றுப் போய்க்கொண்டிருக்கும்,
நாதியின்றிக் கிடக்கும் - சென்னை வாசிகளில்
ஒருவன்...
உங்களில் ஒருவன்!!!
உன்னைப் போல் ஒருவன்...!!!
நான்கு
நாள் யோசித்தவன்...
இன்று
நானூறு மைல் கடந்து,
சுற்றம் பறந்து - எதிலும்
பற்றும் துறந்து,
பந்தபாசம்
அற்றுப் போய்க்கொண்டிருக்கும்,
நாதியின்றிக் கிடக்கும் - சென்னை வாசிகளில்
ஒருவன்...
உங்களில் ஒருவன்!!!
உன்னைப் போல் ஒருவன்...!!!