Monday, January 11, 2010

கருவேலங் காடு





எம்
பசுமைத் தாயகத்தைப்
பாலாக்க வந்த
'பசு'ந் தோள் போர்த்திய
பசுமைத் தாவரமே...

வளமாய் வளர்ந்து
பசுமையாய்
படர்ந்து, வறட்சியினைப்
படரவிட்டாய்...

எம் வயல்களின்
'உப'- திரவம் பருகி
உபத்திரவம் செய்கிறாய்...

ஓரமாய் என்றாலும்
ஒட்டி நின்றாலும், உன்
ஓர வஞ்சனை குறையவில்லை...

எட்டி நின்றாலும்
தட்டிப் பறிக்கிறாய்...

'காசைக் கரியாக்காதே' - புரியவில்லை
நாங்கள்
'கரியினைக் காசாக்குவதால்'...

ரியாகி, எம்
றியகிறாய்...

உணவழித்து,
உணவளிக்கிறாய்...